Headlines

இலங்­கையில் 22,254 தமிழ் பெளத்­தர்கள்

இலங்­கையில் 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். இவர்­களில் வடக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்­தர்­களும் அடங்­கு­கின்­றனர் என புத்­த­சா­சன அமைச்சு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல கேள்­விக்­கான விடை­ய­ளிக்கும் நேரத்­தின்­போது ஐ.தே.கட்சி.எம்.பி. புத்­திக பத்­தி­ரணவின் கேள்­விக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட பதி­லி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. புத்­த­சா­சன அமைச்சின் பதிலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குடி­சன மதிப்­பீட்டுத் திணைக்­கத்­தினால் 2012 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். மேற்­கூ­றப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய வடக்கு…

Read More

வில்பத்து விரிவாக்கம் மீண்டும் ஓர் இனச் சுத்திகரிப்பு

-எம்.ஏ.ஹபீழ் ஸலபி – அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப்  பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சினங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் புலிகளால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச  முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாக தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பாக எதிரும் புதிருமான…

Read More

சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில்  இலங்கை பங்கேற்பு

இலங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருளாதார உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சீனாவின் நணிங்கில் இடம்பெற்ற சீன-ஆசிய எக்ஸ்போ13 (CAEXPO13) கண்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கையின் விஷேட விருந்தினராகப் பங்கேற்று உறையாற்றினார். சீன, ஆசிய நாடுகளின் 15 தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் றிசாத்துக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தென்னாசியாவின் ஒரேயொரு…

Read More

முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றினார். அமைச்சர் றிஷாத் பேசியவை பின்வருமாறு. “இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகின்ற மதத்தை பின்பற்றவும், மத கடமைகளை நிறைவேற்றவும் அணுமதிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளும் இன வாத அமைப்புகளுக்கும் சோரம் போகும் வகையில் தெஹிவலை பள்ளிவிடயத்தில் நடத்துகொண்டமையையிட்டு மிகவும் கவலையடைந்ததுடன் இந்த தெஹிவல பள்ளி மற்றும் மத்ரஸா சட்ட பூர்வமாக நிர்மாணிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் ஹன்ஷாட்டில் இனைக்கும்படி  வேண்டிக்கொள்கின்றேன்.” “ஒரு சில இனவாதம்…

Read More

மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் காத்தான்குடி பொலிஸார்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை, பிரதேச சபை…

Read More

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கையின் வேண்டுதலின் படி சகல விளையாட்டுக்கழங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மடு,முசலி பிரதேசத்துக்குரிய நிகழ்வு முசலி பாடசாலை மைதானத்தில் 02/05/2015 அன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன், அதிதியாக எஹியா பாய்,மாகான பணிப்பாளர் முனவ்வர்,அலிகான் சரீப், கல்விப்பணிப்பாளர் சியான்,இளைஞர் சேவை மன்ற உறுப்பினர் இம்ரான் உற்பட பலர் கலந்து கொண்டனர்

Read More

2004 சுனாமியை விட இலங்கைக்கு வருட இறுதியில் பாரிய பேரழிவு – உலக வளிமண்டலவியல் திணைக்களம்

2004 இல் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று இந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எல்னிலா என்ற கடுமையான புயற்காற்றின் சீற்றம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் எனத்  தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆசியக் கண்டத்தில் இருக்கும் இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து பாரியளவில் வறட்சி ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்றும் (4) தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் இவர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 9ஆவது நாளாகவும் தொடரவுள்ளதாக பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலே தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் போராட்டம் தொடர்வதாகவும்…

Read More

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்க வடகொரியாவின் ஆளும்கட்சி ஒப்புதல்

அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வடகொரியா நாட்டு ஆளுங்கட்சியின் செயற்குழு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை…

Read More

பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்கிறது

இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்பின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது இது சாத்தியமாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் நவாஸ் செரீப்பும் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று (5) செய்து கொண்ட 8 உடன்டிக்கைகளில், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இந்த 8 விமானங்களை இலங்கைக்கு…

Read More

பாதுக்க – அவிசாவளைக்கு விசேட ரயில் சேவை

கொழும்பு – அவிசாவளை வீதி மூடப்பட்டுள்ளமையால் பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வீதி மூடப்பட்டுள்ளது

Read More

புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு

மன்னார்  பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும்  கொய்யாவாடி முகாம்களுக்கு நேற்று (16) விஜயம் செய்தார். தவிசாளர் குழு அங்குள்ள முகாம் அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மீள்குடியேற்றம், அடிப்படைத்தேவைகள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். தவிசாளர் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களது மேலான…

Read More