Headlines

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு…

Read More

மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் விடுத்துள்ள ஊடக அறிக்கை

முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐ.தே.க.தேசியப் பட்டியல் வேட்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக ஸ்தாபிக்கப்பட்டு- பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து!!!

வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அறிக்கை உட­ன­டி­யாக வெளி­யி­டப்­பட வேண்டும். பல தட­வைகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னாலேயே பல்­வேறு சந்­தே­கங்கள் தொடர்­கின்­றன என கைத்­தொழில், வர்த்­தகம் மற்றும் நீண்­ட­கா­ல­மாக இடம் பெயர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். வில்­பத்து…

Read More

தோப்பூருக்கான தனி பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பில் ஆராய்வு!!!

திருகோணமலை மாவட்டம் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் கோரி பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன இது விடயம் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களும் குறித்த ஆவணங்கள் தொடர்பான அமைச்சரவை பத்திரம் மூலமான பல விடயங்கள் பேசப்பட்டதற்கு இணங்க இன்று (12) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களை  கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் தோப்பூர் பிரதேச செயலக தனி உருவாக்கம் பற்றிய ஆவணங்கள் அடங்கிய கோவைகளை…

Read More

”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”   ஊடகங்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சபையில் குற்றச்சாட்டு :

வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த உதவ வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் வாய் மூல வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில், தற்போது மீண்டும் பூதாகரப்படுத்தப்படும் வில்பத்து விவகாரம்…

Read More

முள்ளிப்பொத்தானை அல்_ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் இன்று (15) அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் இப் பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது இவ் நிகழ்வில் தம்பலகம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ரெஜீன் உட்பட டாக்டர்…

Read More

வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ்

மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் மிக வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி, மனித உயிர்களை அதே வேகத்தில் பலி கொண்டு வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றும், இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்றிக்…

Read More

திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட  கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர்  பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  வீடமைப்பு கிராமம்  இன்று (25) வியாழக்கிழமை வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால்   மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு  பயனாளிகளிடம்   “பாவநாசம் 225வது கிராமம்”  கையளிக்கப்பட்டது.இங்கு…

Read More

தனது குடும்பத்தை காக்க உழைக்கும் 8 வயது சிறுமி

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி தனது குடும்பத்தை காப்பாற்ற ஐஸ்க்ரீம் விற்று சம்பாதித்து வருகிறார். பாத்திமா எனும் அந்த சிறுமி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் ஐஸ்க்ரீம் விற்று வருகிறார். வறுமை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ள பாத்திமா தனது தந்தை, தாய், தந்தையின் மற்றொரு மனைவி மற்றும் 5 சகோதரிகளுக்காக கடுமையாக உழைக்கிறார். பாத்திமாவின் தந்தை நான்கு…

Read More

கடும் காற்று! மக்கள் அவதானம்

மலையகத்தின் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது. இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள அதேவேளை, தொடர்ந்தும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியவன்னா வாவியின் நீர்மட்டம் தற்போதைக்கு 1.8 மீட்டரை அண்மித்துள்ளது. இன்னும் ஓரிரு அடிகள் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினுள் முற்றாக வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் நாடாளுமன்ற மைதானம் அதனை அண்மித்த பாதைகள்…

Read More

வவுனியா பாடசாலை வீதி புனரமைக்கப்படும் – ஜனாதிபதி

மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார். வவுனியா பொகஸ்வேவா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற “சர்வதேச சிறுநீரக நோய் ஒழிப்பு திட்டம்” நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொகஸ்வேவா மகா வித்தியாலய வீதியில் இருந்து 40 கிலோமீற்றர் வரையில் பாதை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Read More