Headlines

பைசால் காசீமுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் – அமீர் அலி

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த கருத்துக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செல்லவுள்ளதாக அக் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More

இலங்கை அணுசக்தி சபையில் வாய்ப்பு!

இலங்கை அணுசக்தி சபையில் விஞ்ஞானவியல் உத்தியோகத்தர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14.

Read More

மக்கள் காங்கிரஸின் மகளிர்பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வின் ஒரு பகுதியாகவே அக்குரணையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகளிர் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து குடும்பச்சுமைகளையும் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பல்வேறு மன உளைச்சல்களுக்கும், தாக்கங்களுக்கும் உள்ளாகிவருவதை கருத்திற்கொண்டே இவ்வாறான செயலமர்வு நடாத்தப்பட்டு வருவதாகவும்,  அவர்களுக்கு…

Read More

இராணுவ அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காக

திருகோணமலை காலனித்துவம் மற்றும் அண்மைய இராணுவத்தின் வரலாறு  தொடர்பான அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை இராணுவம் திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றை திருகோணமலை உவர் மலை பகுதியில் அமைத்துள்ளது. நேற்று முன்தினம்  (19) 22ம் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை திறந்து வைத்தார். இன்று முதல் பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும். காலாற்படை ஆயுதங்கள்,கவச வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆடியோ காட்சி  போன்றவை இதில்…

Read More

தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாரளுமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து…

Read More

ஷரிஆ சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்கு வாதம்

இலங்கையில் ஷரிஆ சட்டம் அமுலில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் ஆளுந்தரப்பு எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வருக்குமிடையே கடும் வாக்குவாதம் நேற்று சபையில் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்படுத்தல்கள்) சட்ட மூலம் இரண்டாம் மீதான விவாத்தில்  எம்.பி. ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிடையே அஸ்வர் எம்.பி. குறுக்கீடு செய்தார். இதன்போது எம்.பி,  கழுத்தை அறுக்கும் கைகளை வெட்டும் ஷரி ஆ சட்டம் இங்கு அமுலில் இல்லை எமது…

Read More

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் பொலிஸ்மா அதிபர் அரசியலமைப்பு சபையின் உபகுழுவிற்கு தெரிவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் அரசியலமைப்புக் குழுவின்உபபிரிவு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் குழுவிற்கு சட்டமா திணைக்களத்தின் பிரதானசொலிஸ்டரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோத்தாகொடவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அரசியலமைப்பு சபையில் உபகுழுக்களாக 5 குழுக்கள் இவ்வாறுசெயற்படுவதாகவும், அதன் நியமனங்கள் அனைத்தும் சுயேட்சையானது என்றும் இதில் உள்ளஅதிகாரிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் முறைப்பாடு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையத்தின் சார்பாக நாளை தினம் இந்த முறைப்பாடானது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வேக்கந்தவெல ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளுக்கு இத்துறைமுக திட்டமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

முஸ்லீம் விடயத்தை தனி நபர் பிரேரணையாக முன்வைத்த றிப்கான் பதியுதீன் (VIDEO)

வட மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக அதீத அக்கறை கொள்ள வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபையின் 37 ஆவது மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருதத்து தெரிவிக்கையில் வட மாகாண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் எதிர்கால மீள்குடியேற்றங்களும் என்ற ரீதியில் தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன். இம்மக்கள் 1990 ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேறியதில்…

Read More

புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கம்; ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் ரணில்

* 13ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதே * வெளிநாட்டு, உள்நாட்டு சவால்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் * அரசியலமைப்பு திருத்தத்துக்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பது அவசியம் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே இருக்கும். 13 ஆவது திருத்தச் சட்டமும் அதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு வெளியில் இல்லாமல் பாராளுமன்றத்தினுள்ளேயே பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அத்துடன் 18…

Read More