25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு
நகரங்கள், கிராமங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் பொறுப்பினை தன்னிடம் முன்னெடுக்குமாறு பிரதமரும் ஜனாதிபதியும் பணித்துள்ளதாக தெரிவித்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ வீட்டுப் பிரச்சினைகளை கண்டறிய ஒவ்வொரு பிரதேச மாவட்ட மட்டத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இல்லாது பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றன. இந்தப் பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பெரும் பொறுப்பை…
