Headlines

கச்சதீவை இந்தியா மீள பெறமுடியாது!

கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீள பெறமுடியாது என இந்திய சட்டமா அதிபர் முகுல் ரோஹாட்டிஹி இந்திய உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார். கச்சதீவை மீள பெறுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், முன்னாள் முதல்வர் முத்துவோல் கருணாநிதியும் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1974ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இருதரப்பு இணக்காப்பாட்டின் அடிப்படையில் இந்த தீவின் அதிகாரம் இல்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை….

Read More

“தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தமிழர் – முஸ்லிம் தரப்பினர் ஒரே மேடையில் இருந்து பேச வேண்டும்”

மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது. எமது நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள், பல தசாப்தங்களாக தேங்கிக் கிடக்கிறது. அவற்றுக்கு ஒரு தீர்வுப் பொறி முன்வைக்கப்பட வேண்டுமென்றால், அரசாங்கத்துடன் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒரே மேசையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட…

Read More

பாப்பரசரின் இலங்கை விஜயம்: கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பாப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் புனித பாப்பரசர், ஜனவரி 14ஆம் திகதி காலை 08.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், பிற்பகல் 02.00 மணிக்கு, மடுமாதா…

Read More

விபத்தில் 20 பேர் காயம்!

தலவாக்கலை – லோகி தோட்டம் பகுதியில் பவுஸர் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ரூபா 1500 பெறுமதியான பண்டங்களைக் கொண்ட பொதி ரூபா 975 இற்கு விற்பனை. லங்கா சதொச நிறுவனம் நுகர்வோருக்கு சலுகை

ஊடகப்பிரிவு புத்தாண்டையொட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் ரூபா 1500 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று ரூபா 975 இற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நுகர்வோரின் நன்மை கருதி புத்தாண்டு சலுகையாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர்…

Read More

அம்பாறை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க ACMC ஏற்பாடு

அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் மற்றும் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். கட்சித் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் அனுசரணையுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சாய்ந்தமருது பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

உலகையே வியப்பில் ஆழ்த்திய, புருனேய் நாட்டு மன்னருடைய, மகனின் தங்கத் திருமணம்

புருனேய் (Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், தனது 6 வது மகனான அப்துல் மாலிக் (Abdul Malik-31) என்பவருக்கு திருமணம் நிச்சயத்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று புருனேய் தலைநகரில் உள்ள Istana Nural Iman அரண்மனையில்,உலகமே வியக்கும் வகையில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேஷ நாற்காலிகளை நோக்கி மணமக்கள்…

Read More

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…

Read More

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் அமைச்சர் சஜித்துடன்   அமைச்சர் ரிஷாத் பேச்சு  

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக  வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன்  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாளை மறு தினம் 28 ஆம் திகதி  சந்தித்து பேசுகிறார் இந்த விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன், தொலைபேசியில் உரையாடிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மாணவர்கள் தவறுதலாக இவ்வாறான செயலை மேற்கொண்டு இருப்பதாகவும் எனவே குறித்த மாணவர்களை கருணையின்  அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை…

Read More

சீன பிரதமருடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தலைநகர் பீஜிங்கில் நேற்று (12) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதற்கட்டமாக சீனா பிரதமர் லி கிகுவாங்கை ஏஞ்சலா மெர்கலா இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சீனாவில் ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

Read More

பல்கலை புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இம்முறை வழங்கப்படவுள்ள கையேடானது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான விடயங்கள் நாளை முதல் பத்திரிகைகள் ஊடாக விளப்பரப்படுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு…

Read More

அதிபரின் தாக்குதலில் மாணவர்கள் படுகாயம்

கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தில் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. மேலதிக விசாரணைகளை உடுகம்பொல பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Read More