வருகின்றது புதிய சட்டம்; சிம் அட்டைகளை பெற வதிவிட ஆவணம் அவசியம்
செல்லிடப் பேசி சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. செல்லிடப் பேசி சிம் அட்டைகளை போலியான முறையில் பெற்றுக்கொண்டு பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் சிம் அட்டை வழங்குவதற்கு தேசிய அடையாள அட்டையின் பிரதி மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்டு வந்தது….
