பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: வாசுதேவ
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில் இடமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுடனான ஒப்பந்தத்தின் உண்மை நிலையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருகையின் போது அறிந்துக் கொள்ள முடியும். நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வேஷமும் பிரசாரமமும் கலையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து…
