Headlines

 கொஸ்கம தீ: அபாய வலய எல்லை குறைப்பு

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து முகாமைச்சுற்றி பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அபாய வலய எல்லை, ஆகக் குறைந்தது  500 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை ஜனாதிபதி செயலக உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான, தீர்க்கமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபேகோன் இன்று (31) மாலை உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய பின்னர், அவர்…

Read More

தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது

பழைய தவறுகளுக்கு தண்டனை விதித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எமது நாட்டில் 30 ஆண்டுகள் போர் இடம்பெற்றது. போர் இடம்பெறும் போது அனைத்து விடயங்களும் சட்ட ரீதியாக நடைபெறாது. இராணுவத்திற்கோ, ஆட்சியாளர்களுக்கோ அல்லது போர் செய்தவர்களுக்கோ தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. சிங்களம் தமிழ் என்று பேதமில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மீளவும் இதயங்களை குரோதம் ஏற்படாத வகையில் தேசிய…

Read More

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் பொதுக்கூட்டம்: அதிதியாக அமைச்சர் றிஷாத்

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் (UMNO) வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (10) மலேசியா, கோலாலம்பூர், பியூட்றா உலக வர்த்தக நிலையத்தில் ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் இந்நிகழ்வில் அதிதியாக பங்கேற்றார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஜமீலும் கலந்துகொண்டார். உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! ACJU சார்பாக BBS உடன் SLTJ விவாதிக்கத் தயார்!

(sltj) கடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் தொடர்பாகவும், இந்த உலகுக்கு இறைவனால் அருளப் பெற்ற இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கள் தொடர்பாகவும் பலவிதமான விமர்சனங்களும், இனவாததத்தை ஊக்குவிக்கும் விதமான கருத்துக்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே. பொது பல சேனாவின் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும், திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்…

Read More

குச்சவெளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (24) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து   பாராளுமன்ற உறுப்பினரால் உரிய உபகரணங்கள்…

Read More

எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்

அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக் கூட நாங்கள் பௌத்த சமயக் கோட்பாட்டுக்கு அநியாயமிழைக்கின்ற ஒரு சமூகமாக இந்தநாட்டில் இருக்கின்ற 90 விகிதமான சிங்கள மக்கள் மத்தியிலே காட்டுகின்ற வகையில் இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறது. அவை மட்டுமல்ல இந்தப் பிரதேசங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருகாட்டுப் பிரதேசமாககெசட் பண்ணப்பட்டுள்ளது. இதில் சோந்தக்…

Read More

தோப்பூர் “நிலசெவன” கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் முன்மொழிவில் நிர்மாணிக்கப்பட்ட, தோப்பூர் “நிலசெவன” கட்டிடம் மற்றும் மூதூர் புதிய பிரதேச செயலக கட்டிடம் ஆகியன அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ன சிங்கம் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். (ன)    

Read More

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை!– ஜே.வி.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது. ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது. ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின்…

Read More

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, பிணையில் செல்ல அனுமதியுங்கள் : சந்தேக நபர்கள் கோரிக்கை

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்….

Read More

குளிர்பானத்துக்கு சேர்க்கப்படும் நிறம் சுகாதாரமற்றது என வழக்குத் தாக்கல்!

வியா­பார நோக்­குடன் பைக்கற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர் பானத்­துக்கு இடப்­படும் கலர் உணவு பண்­டத்­துக்கு உத­வாத நிறத்தூள் எனத் தெரிவித்து மன்னார் நீதி­மன்றில் பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் வழக்குத் தாக்கல் செய்­துள்­ளனர். மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள இலுப்­பைக்­க­டவை வெள்ளாங்­குளம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­களை திடீர்­ சோ­த­னை­யிட்ட மாந்தை மேற்கு பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் பக்கெற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர்­பா­னங்­க­ளுக்கு இடப்­படும் கல­ரா­னது உணவுப் பண்­டங்­க­ளுக்கு உத­வாத பொருள் என குற்றம்சாட்­டப்­பட்டு இதை உற்­பத்தி செய்யும் வர்த்­த­க­ருக்கு…

Read More

“பாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது” கலாநிதி ஹசன் சொஹைப் முராத்!!!

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார். லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM Trust) தலைவராகவும், ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் இருக்கும் இவர், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More