Headlines

சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலை கண்டித்த சிரியா மற்றும் ஈரான்

ஞாயிற்றுக்கிழமை சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையாக ஓர் தாக்குதலையும் லெபனான் எல்லைக்கு அருகே டிமாஸ் நகருக்கு அண்மையில் ஓர் தாக்குதலும் என இரு விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியிருப்பதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. 4 வருடங்களுக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்தே சிரியா மீது இஸ்ரேல் அத்துமீறி சில தடவைகள் விமானத் தாக்குதல் நடத்தியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்…

Read More

பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார். பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 324 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் வர்த்தக மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்….

Read More

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படமாட்டார் – அமெரிக்கா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு தமிழ் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்காவில் தங்கியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அவரை அமெரிக்காவில் வைத்து கைது செய்ய வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தன. எனினும் அமெரிக்கா ரோமப்…

Read More

இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; 5 இந்தியர்களுக்கு மரண தண்டனை!

5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமண்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைக் கண்டித்து இராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காமடம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று பெரும் போராட்டம் வெடித்தது. வாகன, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் தமிழக அரசு…

Read More

குழந்தையை பலியெடுத்த எறும்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை மூச்சுத்திணறலால் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (2) அதிகாலை வேளையில் அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த தாதிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார். எறும்புகளை தாதியர்கள் துடைத்தபோது குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின்…

Read More

தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (29) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக  மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, மட்டக்களப்பு மத்தி…

Read More

புடாபெஸ்ட் பிரகடனத்தில் இலங்கைக்கு அங்கத்துவம்

புடாபெஸ்ட் சைபர் குற்றம் தொடர்பான பிரகடனத்தில் அங்கத்துவம் பெறும் முதலாவது தெற்காசிய வலய நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது. இதற்கான தகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் சட்ட ஆவணத்தை ஐரோப்பிய கவுன்ஸிலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICTA) சட்டப் பணிப்பாளர் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கவுன்ஸில் செயலாளர் நாயகம் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததற்கு அமைய குறுகிய காலத்தில் சட்ட ஆவணம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கைக்கு…

Read More

கல்கமுவ அல் /அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ மஸ்ஜிதுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ தொகுதி அமைப்பாளர் பத்ர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்கமுவ பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும்…

Read More

“அபி பைஹினவா” ஜனாதிபதி கூறிய இரண்டு வார்த்தைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கம் தொடர்பில் இரண்டு வார்த்தையில் கருத்து வெளியிட்டுள்ளார். “அபி பைஹினவா”   என்ற இரண்டு வார்த்தைகளையே ஜனாதிபதி கூறியுள்ளார். “நாங்கள் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறோம்” என்பதை பேச்சு வழக்கில் “நாம் கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    ஆனால் “”நாங்கள் இறங்குவோம்””  என்று கூறுவதற்கும் இவ்வாறு அப்பி பைஹினவா”    என்று சிங்கள  மொழியில் கூறப்படுவதுண்டு. கடந்த வார இறுதிப்பகுதியில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஊழல்கள்…

Read More

இலங்கையில் இப்படியும் ஒரு சாரதி..!

க.கிஷாந்தன் பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் 18.03.2015 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி என்ற பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார். பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி,…

Read More

பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப் பட்டறை

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று அன்மையில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக மஃஹதுஸ்ஸுன்னா மகளீர் அரபிக்கல்லூரி விரிவுரையாளர் மௌலவியா சில்மியா தாரிக் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்

Read More

ஐரோப்பாவில் இலங்கை மீன்களுக்கு கிராக்கி – திணறுகிறது இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், இந்த தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன….

Read More