Headlines

இந்திய ஊடகவியலாளருக்கு அமைச்சர் றிஷாத் வழங்கிய விசேட பேட்டி

இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடில் அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்;இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் நவமணி நாளிதழுக்கு சிறப்பு பேட்டி –`திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது – இலங்கைக்கு இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயம் செய்தார். பின்னர் பல்வேறு அரசியல் முக்கிய முஸ்ஸிம்…

Read More

ஹஜ் விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

குருநாகல் வெகர மைதானத்தில் இடம்பெறும் “தேசிய நல்லிணக்கத்திற்கான ஹஜ் விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றியபோது….

Read More

அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

முஹர்ரம் – இஸ்லாமிய புதுவருடத்தைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஹர்ரம் மாதம் ஆரம்ப மாதமாகவும், சிறப்பான மாதமாகவும் கருதப்பட்டு, கொண்டாடப்படுகின்றது. பெருமானார் நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஹிஜ்ரி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இது…

Read More

மறிச்சுக்கட்டியில் அமைச்சர் றிஷாத்!

-சுஐப் எம். காசிம் – வடபுலத்திலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பாரிய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ள போதும், நம்மைச் சார்ந்த சிலரின் போக்குகளும், செயற்பாடுகளும் அந்த முயற்சியை சிக்கலாக்கும் வகையில் அமையக்கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், மறிச்சுக்கட்டியில் மீளக்குடியேறியுள்ள மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மீளக்குடியேறும் செயற்பாடு என்பது இலகுவான காரியம் அல்ல. அவசர அவசரமாக ஒரே நாளில் மனம்போன போக்கில் செய்யக் கூடிய ஒரு முயற்சியும்…

Read More

அமைச்சர் ரவி வாஷிங்டன் பயணம்

பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும்மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கிறது இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன் நிமித்தம், வாசிங்டனுக்கு இந்தவாரத்தில் செல்லவுள்ளார். அவருடன், நிதியமைச்சின் செயலாளர்; ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின்ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர். எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுநலவாய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களி;ன் மாநாடுநடைபெறவுள்ளது. இதனையடுத்து 7 முதல் 9ம் திகதிவரை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைஅமர்வு…

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை கடந்த சில வருடங்களாக நட்டத்தில் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக அண்மையில் இந்த விமான சேவைக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு, தொட்டலங்க…

Read More

மாணவர்கள் மூவர் கைது!

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் 16 மற்றும் 14 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரவு வேளைகளில் வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைத்து அங்குள்ள பொருட்கள்மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனையடுத்து நேற்றைய தினம் (02) குறித்த மூன்றுமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர்கள்…

Read More

அல்ஹம்றா மத்திய கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் (01.10.2016) பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான அப்துல்லா மகரூப் அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Read More

முதியவர்களுக்கு இனி ஆடம்பர பஸ்கள்!

முதியோர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆடம்பர வசதிகளுடன் கூடிய பஸ்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

புதிய வற் சட்டமூலம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பு

வற் என்ற பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்படி குறித்த சட்டமூலம் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது தடவை இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரேரணை, அமைச்சரவை அங்கீகாரம் பெறாமைக்காரணமாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் புதிய சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. இதில், முன்னைய சட்டமூலத்தை காட்டிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Read More

வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை கிழக்கு பாடசாலைகளுக்கு இடம்மாற்ற நடவடிக்கை!

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளகிழக்கு மாகாணத்தை சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தேசிய கல்விக் கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கானஆசிரியர் நியமனத்தின்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு…

Read More

மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு

விவசாய நடவடிக்கைகளுக்கான  செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More