Headlines

ரணிலை பிரதமராக்குவதில் சிக்கல், சந்திரிகா நெருக்கடியில் – பல்டிக்கு தயாரானோர் பீதி

நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த  உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென பொதுஎதிரணி  பிரச்சாரம் செய்து வருகிறது. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதிகாரங்கள் பகிரப்பட்டு பிரதமர் ஆட்சி நடக்கலாம். ஆனால் பிரதமர் ரணிலாக இருந்தால் நாம் வெளியேற மாட்டோம். மைத்திரி கூறிய வார்த்தையை மீளப்பெற்று பிரதமர் யார்…

Read More

கல்பிட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து குழந்தை பலி

புத்தளம் – கல்பிட்டி  பகுதியில் குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 5 வயதுடைய குழந்தை  உயிரிழந்துள்ளது.  சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்­டிய எத்­த­னையோ விட­யங்­களைப் பெறாமல் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவும், சமூக விடு­த­லை­யினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் எமது கட்சி இம்­மா­வட்­டத்­திற்கு வந்­ததே தவிர யாருக்கும் தீங்கு விளை­விப்­ப­தற்­காக எமது கட்சி  இங்கு வர­வில்லை. நாம் சமூ­கத்தின் நல­னுக்­காக செயற்­ப­டு­வ­தால்தான்  இன்று எத்­த­னையோ இடங்­களில் எனக்­கெ­தி­ராக கொடும்­பா­விகள் எரிக்­கின்­றார்கள் என அகில இலங்கை…

Read More

இறக்காமத்தில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை  கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும். கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண…

Read More

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கரையோர வீதியானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பிரதியமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் இன்று (26) ஞாயிற்றுக் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மிக நீண்ட கால…

Read More

“சுதந்திர தின கிண்ணம்” 2019 கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக ஹஸீப் மரிக்கார்

தர்கா நகர் “ரெட் எபல்” (Red Apple) கிரிகட் கழக ஏற்பாட்டில் நடைபெற 12 கிரிகட் கழகங்கள் பங்குபற்றும், “சுதந்திர தின கிண்ணம்” (Independent Champions Trophy-2019) கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (02) காலை தர்கா நகர் பாகிர் மாகார் மைதானத்தில் நடைபெற்றது. இதன் அங்குரார்பண ஆட்டத்தில் தர்கா நகர் “ரெட் ஸ்டார்” (Red Star) மற்றும் “ஸஹிரியன்ஸ்” (Zahirians) கழகங்கள் மோதியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள்…

Read More

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து…

Read More

மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது. பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை திரட்­டிக் ­கொள்ள வேண்டும் என கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது, எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ஸவை…

Read More

ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக அமெரிக்காவில் தாக்கப்பட்ட பெண் ??

ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக நதீம் மொஹ்சின் என்ற சகோதரி அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியின் பாரிக்லேஸ் வீதியில் தாக்கப்பட்டுள்ளார்.. இந்த கொடூரத்தை கண்டித்து அமெரிக்காவில் போராட்டாங்களை நடைபெற்றது.. காவல்துறை இந்த குற்றத்தை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.. நதீம் தாக்கப்பட்ட இடத்தில் தான் இஸ்ரேலிய கால்பந்தாட்ட அணி விளையாடியதும் அந்த நேரத்தில் சியோனிச ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இனவெறியை தூண்டும் பலத்த கோசங்களை எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.. அரைகுறை ஆடையுடன் பெண்களை போகப்பொருளாக காட்டுவதை பெண்…

Read More

ஒலிம்பிக் தின ஓட்டத்தை பிரேஸில் தூதுவர் ஆரம்பித்து வைத்தார்

சர்வதேச ஒலிம்பிக் குழு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் தின ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் காலி நகரில் நேற்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டதுடன் வரைதல் போட்டி, ஒலிம்பிக் தின ஓட்டம் என்பன நடைபெற்றன. சர்வதேச ஒலிம்பிக் குழு 1894இல் ஜூன் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் தினம் பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் நவீன ஒலிம்பிக் அமைப்பின் பிறப்பைக் கொண்டாடுவதும்…

Read More

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழா இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் முஸ்தாக் தலைமையில் இடம் பெற்றது. கலை இளமானி பட்டம், டிப்ளோமாதாரிகள், முதுமானி பட்டங்களை பூர்த்தி செய்தோர்களுக்கான பட்டங்களே வழங்கப்பட்டன. துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் தலைவரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்….

Read More