Headlines

புதிய ஆலோசகர் நியமிப்பு

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மற்றுமொரு வெளிநாட்டுநிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த விசேட நிபுணரான மோதோ நபூச் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

Read More

சங்கக்காரவை விடவும் அரசாங்கம் சிறப்பாக விளையாடுகிறது – மஹிந்த

மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாக சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை உடற்பயிற்சியில் ஈடுபட மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று அவருடன் கலந்துரையாடிய போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. எனக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்ததில்லை….

Read More

இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை துரத்தி துரத்தி அடிக்கின்றன. பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு. வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ அத்தனை உச்சக்கட்டத் தடைகளையும் இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (13) அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு சோதனைகளையும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில்…

Read More

சஜின்வாஸ் குணவர்த்தனவின் வீட்டின் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் அம்பலாங்கொட பிரதேச வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று மாத்திரமே வெடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாச வின் அரசியல் முன்மாதிரி

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் பேரியல் ;அஸ்ரப் மற்றும் காலம் சென்ற அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் ஆகியோர்கள் கபினட் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வாழ்ந்த கொழும்பு 7 ஸ்டோமோ கிரசன்ட் வீதியில் உள்ள வாசஸ்தலத்தை இன்று வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இவ் வீட்டை மீள அமைச்சின் செயலாளாருக்கு பொறுப்பளித்தார். இவ் வீட்டுகாக பல மில்லியன் ரூபாய்களை செலவழித்து கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச அழகுபடுத்தியுள்ளார்….

Read More

எதிர்க்கட்சித் தலைவர் தமிழன் என்பதால் முகாம்களுக்குள் செல்லத் தடையா?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழன் என்பதால் தான் இராணுவ முகாம்களுக்குள் செல்லத் தடையா? அவ்வாறு தடை விதித்தது யார்? என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மற்றைய நாட்களில் நாங்கள் படை முகாம்களுக்குள் சென்றுள்ளோம், உறங்கியும் இருக்கின்றோம், அப்பொழுது எல்லாம் மௌனம் காத்த இவர்கள் சம்பந்தன் சென்றதை மட்டும் ஏன் இவ்வாறு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரிவித்தார். கடந்த 16ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை…

Read More

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கொன்றை நேற்று வாபஸ் (5) பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சில் அனுட்டானங்களுக்கான துணிகளை விநியோம் செய்யும் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தார். பொதுமக்களின் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து குறித்த துணிவிநியோக பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பெப்ரல் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தது. இது…

Read More

ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானியயா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானிய ஜும்மாப் பள்ளி மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More

விபத்தில் இளைஞர் பலி : இருவர் படுகாயம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மண்முனை சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 27 வயது ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொக்கடிச்சோலை பக்கமிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனை பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27…

Read More

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் தவிசாளர் தாஹிர் கோரிக்கை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் ரிஷாட் படுகொலை தொடர்பான செய்தியானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சத்தை…

Read More

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணியினை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்-உலமா சபை

வவுனியா  மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்களுக்கான கூட்டமொன்று இன்று வவுனியா இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி சபை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீரடமானங்களை வ்வுனியா மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும செயலளார் ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவ்வறிக்கையின் விபரங்கள் வருமாறு –  ( 1 ) வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என மூவின மக்களும் புரிந்துணர்வுடனும்,ஒற்றுமையுடனும் வாழ்ந்து வரும் இத்தருனத்தில் அதை சீர்குலைக்க …

Read More