Headlines

கொவிட்-19 தொற்றுக்குள்ளான ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர விரைவில் குணமடைய மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரார்த்தனை!

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜெயசேகர ஆகியோர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்பப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உலகில் ஏற்பட்டுள்ள இக்கொடிய நோய் நீங்கி, சகலரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன் எனவும், நமது இறுதி வெற்றி, பிரார்த்தனையில் உள்ளதென்ற நம்பிக்கையினாலேயே சகலதையும் வெல்ல…

Read More

“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெ ரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத்தூபியை இப்போது…

Read More

“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை; ஜனாஸாக்களை எரிப்பது எம்மை உயிருடன் கொளுத்துவதற்கு சமனானது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இனவாதிகளை மகிழ்வூட்டுவதற்காகவும் எதிர்கால அரசியல் இருப்பை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காகவும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாட்டை தொடருவீர்களேயானால், அதன் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதோடு, உலக நாடுகளில் இருந்து முற்றாக அந்நியப்பட்டுவிடுவீர்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நாட்டைப் பீடித்துள்ள கொரோனா வைரஸை விட இனவாதமே தற்போது மோசமாகத் தலையெடுத்துள்ளது. ‘இனவாதத்தையும் மதவாதத்தையும் கையிலெடுத்து மக்களை திருப்திப்படுத்தலாம், நாட்டுக்கு நல்லது செய்யலாம்,…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர் தன்னைப்பற்றி விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டு; ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விமல் வீரவன்சவின்…

Read More

“நிபுணர் குழுவின் பரிந்துரையை அவசரமாக நடைமுறைப்படுத்துங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்!

கொவிட் 19 தொற்றினால் இறந்த உடல்கள் சம்பந்தமாக புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதில் இருந்து முழு உலகமும் சொல்லொணா துயரத்துக்குள்ளாகியது. இலங்கையும் அதற்கு விதிவிலக்காய் இருக்கவில்லை. என்றாலும் வைரஸ் முதல் அலையை சிறப்பாகக் கையாண்டு, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அரசாங்கம் , முஸ்லிம்களின் ஜனாஸாக்களை…

Read More

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கிண்ணியா நகர சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!

முஸ்லிம் தலைமைகளின் கைதுகள், சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் அடக்குமுறையே ஆகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார். ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, கிண்ணியா நகர சபையின் இன்றைய (28) சபை அமர்வில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமின் தலைமையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம் இடம்பெற்றதுடன் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் கைதுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரோனா மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யாது, தகனம் செய்வது…

Read More

“அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீதின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது” – தவிசாளர் அமீர் அலி!

அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீத் அவர்களின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். மருதூர் ஏ. மஜீத் அவர்கள் கல்வித்துறையில் இலக்கியத் துறையில், கலைத்துறையில் என்று பல்கலை விற்பன்னராகத் திகழ்ந்தவர். எனக்கு மிகவும் பிரியமான ஒரு பேச்சாளர். அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் எவ்வளவு நேரம் அவருடன் உரையாடினாலும் அலுப்பு ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு திறமை மிக்க பெரியவரை நாம்…

Read More

“பன்முக ஆளுமை மணிப்புலவரின் மறைவு கவலை தருகின்றது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்!

பன்னூலாசிரியரும் சிறந்த இலக்கிய ஆய்வாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்களின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறந்த மேடைப் பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞருமான இவர், இலக்கிய உலகிற்கு எண்ணற்ற பங்களிப்புக்களை நல்கியவர். வெறுமனே எழுத்துலகில் மாத்திரம் அன்னார் ஈடுபாடு காட்டியவரல்லர். பன்முக ஆளுமை படைத்த மணிப்புலவர் நாட்டாரியலில் செய்தளித்திருக்கும் ஆய்வுகள் காலத்தால் அழிக்க முடியாதவை மாத்திரமின்றி, எதிர்கால சந்ததிக்கு சிறந்த இலக்கியப் பதிவுகளாகவும்…

Read More

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, இன்று காலை (23) கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும்…

Read More

“இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்” – கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி!

இலங்கையில் பிறந்து, வளர்ந்த  ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மரணித்த உடலுக்கான  இறுதிக் கடமைகளை அதன் உறவினர்கள் விரும்புகின்றவாறே நிறைவேற்றுவது, அவர்களது அடிப்படை உரிமை ஆகும். ஆனால், தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கின்ற உடலங்களை எரித்தேயாக வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்நிலையில், மரணிக்கின்ற தங்களது உறவுகளின் உடலங்களை ‌எரிக்காமல்,…

Read More

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 2021- ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மொத்த உறுப்பினர்கள் – 21 ஆதரவு – 10 உறுப்பினர்கள் எதிராக – 9 உறுப்பினர்கள் மு.கா உறுப்பினர் ஒருவர் நடுநிலைமை ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Read More

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக தமிழ்ப் பெண் நியமனம்!

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக கடந்த 08.12.2020 அன்று அரச…

Read More