Headlines

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

Read More

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்;
மக்கள் காங்கிரஸ் கருவுடன் சந்திப்பு!

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கும், அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப்…

Read More

“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும்….

Read More

பொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்? – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இஸ்லாம் பற்றி பூரண அறிவைப் புரிந்துகொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து, அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டுமென ரிஷாட் எம்.பி தெரிவித்தார். அமைச்சர் உதயகம்மன்பில அண்மையில் பாராளுமன்றத்தில் குர்ஆன் தொடர்பில் கூறிய கருத்துக்கு தெளிவூட்டும் வகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இன்று (20) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,    இந்த அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையைப் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த…

Read More

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக,…

Read More

முடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை; கிண்ணியா நகரசபை உறுப்பினர்  எம்.எம்.மஹ்தி!

கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம  மக்களுக்கு அரச கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நேற்று (17) கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, “கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தில், 857 குடும்பங்களை சேர்ந்த 3187 பேர்  பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அன்றாடம் தொழில் செய்வதன்…

Read More

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர். எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு ஆவன செய்யுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அகில இலங்கை…

Read More

“வடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும்  வடக்கு, கிழக்கில் நாளை (11) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ளன. எனவே, நாளை இடம்பெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்…

Read More