Headlines

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்!

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் (இந்திய வீடுகள்)  என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம்  என்ற பெயர்களில்  நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட  ஊர் மக்கள் முறையிட்டனர். மன்னார் வெள்ளாங்குளம் , தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த  அமைச்சரை , சந்திக்க வந்த  இந்த அயற்கிராம மக்கள் வாழ்க்கையில் தாம் பட்டுவரும் அவஸ்தைகளையும் அவலங்களையும் அமைச்சரிடம் வேதனையுடன் விபரித்தனர். “இந்த மூன்று கிராமங்களில்…

Read More

அஜித் ரோஹன OUT – றூவான் குணசேகர IN

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கொழும்பு – வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்,  புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

Read More

இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்தோஷமாகவுள்ளேன் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவு வலுவடைந்துள்ளமையால் இன்று நான் மிகவும் சந்தோஷமாகவுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்த போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த 28 ஆண்டுளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார்.  பௌத்தம் மற்றும் இந்து மதங்களால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே…

Read More

1 இலட்சம் ருபாவே செலவழித்து முதன் முதலில் பாராளுமன்றம் சென்றேன் – மைத்திரி

அஸ்ரப் ஏ சமத் விசேட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பத்திரமே இருக்கும். அது 20வது தேர்தல் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டவையாகும். இன்று  எனது தலைமையில் எவ்வாறேனும் அப் பத்திரத்திரத்தை அனுமதிப்பதாகும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதியான 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அத் சீர்சிருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை தமது கையை உயர்த்தி அனுமதித்தல் வேண்டும். என இன்று கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி கொழும்பு சம்மேளத்தில்…

Read More

விசேட போக்குவரத்துச் சேவை!

தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட பஸ் சேவை மற்றும் புகையிரத சேவைகள் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, நுவரெலியா, ஹட்டன், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ் விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விசேட சேவைக்காக 2000 மேலதிகமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பொது மக்களின் போக்குவரத்து வசதி கருதி தற்காலிகமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பஸ்,…

Read More

வாக்குமூலம் வழங்க வந்தார் சத்தாதிஸ்ஸ தேரர்

சொந்த தேவைகளுக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் 7 அரச வாகனங்களை பெற்றுகொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (13) காலை வருகை தந்துள்ளார்.

Read More

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரிலுள்ள 30 முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் சுமார் 600 மாணவ மாணவிகளுக்கு தரம் ஒன்றுக்கான பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைவான 300 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு  (15) நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிந்தவூரின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஆக்கமும்…

Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக வரையறை

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் 45 பேரையும், பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பொறுப்புக்களுக்கு 48 பேரையும நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் கட்சியின் இந்த யோசனை உத்தியோகபூர்வமாக நேற்று நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை நாடாளுமன்றின் ஊடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென 19ம் திருத்தச் சட்டத்தில்…

Read More

வட் வரிக்கு எதிர்ப்பு – கொழும்பில் ஆர்பாட்டம்

வட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாட்ர் வெயார் ஊரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு, குவாரி பாதைக்கு அருகாமையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. மேலும், ஹார்ட் வெயார் ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை தொடரவுள்ளர். இதன்காரணமாக வியாபாரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஜப்பானுக்கு செல்வதே எனது இலக்கு ; யாழில் முதலிடம் பெற்ற மாணவன்

ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றியதாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கபிசன் தெரிவித்தார்.மேலும் அவர் கருத்துதெரிவிக்கையில்,நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றினேன்.

Read More

இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி கவலையில்லை; வந்துவிட்டது பேஸ்புக் ‘லைட்’!

இண்டர்நெட் மற்றும் வை-ஃபை நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்தில் பேஸ்புக்கை தடையின்றி பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்ஸை வெளியிட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது பேஸ்புக் நிறுவனம். முதற்கட்டமாக இந்தியா உள்ளிட்ட ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் விரைவில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ந்த நாடுகளிலும் கூட பல்வேறு இடங்களில் நெட்வொர்க்குகள் வேகமாக இருப்பதில்லை. இதனால், பேஸ்புக்கின் அனைத்து…

Read More