Headlines

மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட வீதிகள் திறந்து வைப்பு

மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட மார்கட் வீதி மற்றும் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ஆகியன ஆரம்பித்து திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தலைமையில் நேற்று 12.02.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனும், விஷேட அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். மேலும், அநுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், குருணாகல்…

Read More

நாடாளுமன்றத்தில் திஸ்ஸவுக்கு ஆசனம் இல்லை!

நாடாளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆசனம் இல்லை! அவருக்கான ஆசனம் சபை முதல்வரின் பட்டியல்படியே ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார். எனினும், அத்தநாயக்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து அத்தநாயக்க அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் சபாநாயகரிடம் இது முறையில் முறையிட்டுள்ளார்.. சபாநாயகரும் மீண்டும் நாடாளுமன்ற செயலாளருக்கே அதனை பாரப்படுத்தினார். இந்தநிலையில் ஆசன பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னரே அவர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.

Read More

கடத்தப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிப்பு

50 கோடி ரூபாய் கப்பம் கேட்டு, நைஜீரியாவில் உள்ள காடொன்றில் சிறைவைகப்பட்டிருந்த இலங்கை பொறியியலாளரான டி.ஏ. கருணாதாஸ, இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.30க்கு விடுவிக்கப்பட்டுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

ஜனநாயகக் கட்சி, ஐ.தே.க.வுடன் நாளை இணையும்

பீல்ட் மார்ஷல்  பொன்சேகாவின் தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி, நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

மீரியாபெத்தை கிராமம் அபாய பிரதேசமாக பிரகடனம்

மண்சரிவுக்கு உள்ளான பதுளை, கொஸ்லந்த, மீரியாபெத்த கிராமம், அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, சுமார் 25 முதல் 30 அடி ஆழத்திலிருந்து இந்த சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 6 சடலங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை தோன்றுவதாகவும் அச்சடலங்களை…

Read More

முஸ்லிம் ஒருவரின் படுகொலை மிகவும் துரதிஷ்டவசமானது -மோடி

– சாகுல் ஹமீட் – இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அதில், தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அரசு எதிர்க்கிறது. பா.ஜ.,வும் சரி, அரசும் சரி, நானும் சரி இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாக்., பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி உட்கொண்டதாக…

Read More

இந்திய துறைமுகங்களினால் பாதிப்பு இல்லை!

இந்தியாவின் துறைமுக அபிவிருத்திகள் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக்கரை துறைமுகங்களின் அடித்தள கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யும் அது கொழும்பின் துறைமுகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கையில் இருந்து பணி ஓய்வுப்பெற்று நாடு திரும்பவுள்ள சிங்ஹா குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சர்வதேச கடல்வலய…

Read More

பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உட்பட இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

Read More

வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் – சந்திரிக்கா பகிரங்க அறிவிப்பு

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார். எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய…

Read More

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

Video-‘குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி’

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்! மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது….

Read More

வாவியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!

தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னாலுள்ள ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ஓட்டமாவடி, மாவடிச்சேனையைச் சேர்ந்த மீராசாஹீப் ஹனிபா (வயது 30) என அடையாளங் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஒரு மனநோயாளி என்றும் நேற்று காலையில் வீட்டிலிருந்து வெளியேறியவர் என்றும் உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More