Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸினால் வீதி திறந்துவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகான சபை உறுப்பினருமான எ.ஜெ.மொஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியிலிருந்து வெல்லம்பிட்டிய மஹாபுத்கமுவ பாதை புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டது

Read More

இந்தியாவில் தோன்றிய அரசியல் மாற்றத்தினால் இலங்கையுடனான வர்த்தக உறவு அதிகரிக்கும்

இந்தியாவில் புதிய பிரதமர் பதவியேற்றமை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்களை ஏற்ப டுத்துவதோடு இலங்கை, இந்திய வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றமடையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இலங்கை வந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் உயர்மட்ட பிரதிநிதி குழுவின ருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் உரையாற்றும் போதே…

Read More

பா.உ. நவவியினால்  புத்தளம் பாடசாலைக்கு பல்ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு 

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஆறாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.சீ. யாஹ்கூப் (நளீமி) அவர்களின் தலைமையில் அண்மையில்பாடசாலை வாளகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் போது அவர்கள் தமது பண்முகப்படுத்தப்பட்டு வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பாடசாலைக்காக பல்ஊடக உபகரணங்களை (Multimedia…

Read More

ஜீஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இந்த சலுகையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஒன்றியத்தின் இலங்கை்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும்…

Read More

ஞானசாரரிடம் பொலிசார் விசாரணை

கண்டியில் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீதான தாக்குதல் குறித்து ஞானசார தேரரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கண்டியில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது குண்டர்கள் சகிதம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஞானசார தேரரிடம் நேற்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பியுள்ளனர்….

Read More

எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது: வெள்ளை மாளிகை

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, பொது மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் போன்கள், இணைய தளங்களை உளவு பார்த்ததை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனால் அந்நாட்டிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உளவு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தேடப்படும் குற்றவாளியானார். அமெரிக்காவிடமிருந்து தப்பிக்க வேண்டி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். கடந்த 2013…

Read More

சரித்திர நாயகன் றிஷாத் பதியுதீன்!

-நியாஸ் கலந்தர் – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முக்கிய வகிபாகம் வகித்து இன்று வரை சளைக்காமல் போராடும் முஸ்லிம் அரசியல் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்று பெருமையுடன் கூறமுடியும். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வில்பத்து ஜீவராசி பிரகடனம் முன்மொழியப்பட்டது.இந்த பிரகடனம் மூலம் வடக்கு முஸ்லிம்கள் தங்களது பூர்வீக இடங்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.வடபுல மக்களை மீள் குடியமர்த்த வேண்டும் என இரவு,பகல் பாராது தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்திருக்கும் ஓர் அரசியல் தலைவனாக…

Read More

முஸ்லிம் நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்கென செல்லும் இலங்கை பெண்கள், அடிமை சேவைகளில்..!

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்கென செல்லும் இலங்கை பெண்கள், அங்கு அடிமை சேவைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றின் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். இது சம்பந்தமான எமது அமைப்பின் மாநாடுகள் மற்றும் சமய போதனைகளின் போது மக்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் அடிமை தொழில் சம்பந்தமாக நாங்கள் கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வருகிறோம்….

Read More

இலங்கை குறித்த விசாரணை அறிக்கை இன்று ஜெனிவாவில் வெளியீடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது. இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஐகிகிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். இந்த விசாரணை அறிக்கை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் படி ஐந்து நாள்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அதிவேக வீதியை பயன்படுத்த முற்பட்ட பயணிகளினால் தெற்கு அதிவேக வீதியின் அருகாமையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  20 மீட்டர் தூரம் வரை  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

Read More

அதிவேக நெடுஞ்சாலை இன்று இலவசம்

தெற்கு அதிவேகப் பாதையின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பாதையை பொதுமக்கள் இன்று இலவசமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.    

Read More