Headlines

அகலக் கால் பதிக்கின்றாரா அமைச்சா் றிஷாத்!

அஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில் 9  பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா். இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.கா. முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள்  இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா். இதேவேளை, அ.இ.ம.கா, ஜ. தே.கட்சியின் யாணைச்…

Read More

கடன் மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது: ரவி கருணாநாயக்க

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட அதிகளவான கடன்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனாலும், இவற்றினால் நாட்டு மக்களுக்கு பொருளாதார சுமை அதிகரித்துவிடாதவாறு பார்த்துக் கொள்வது தொடர்பில் புதிய தேசிய அரசாங்கம் அக்கறை செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் க்ரீட் லோச்சன் நேற்று திங்கட்கிழமை நிதியமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

Read More

இலங்கை பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு!

இலங்கையின் இனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா கட்டமைப்பு ரீதியாக பொருத்தமில்லாத நாடு என, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உணர்வு மற்றும் தேர்தல் அதிகாரங்களோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை ஜயதிலக்க ஞாபகப்படுத்தியுள்ளார். மேலும் இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும்…

Read More

நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கள் இலத்திரனியல் முறையில்

நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை இலத்திரனியல் முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப்…

Read More

இன்று கடும் மழை பெய்யலாம்

இன்று (6) நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் இதனால் 75 மில்லிமீற்றர் அளவில் நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வடக்கு பகுதியில் இம்மாதம் 5 தொடக்கம் 14ஆம் திகதி வரையில் சூரியன் உச்சமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினம் ஓப்பனாயக்க,வடக்கு-களுத்துறை,மொலமுர மற்றும் மகாவெல்லத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நண்பகல் 12.03 மணியளவில்…

Read More

பாராளுமன்றம் கலைக்கப் பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!:10 ரஷ்யத் துருப்புக்களைக் கைது செய்தது அரசு

திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஆக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் தேசிய இணக்கப் பாட்டைக் கொண்டு வரக் கூடிய எந்தவொரு முடிவிலும் ரஷ்யா பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனுக்கு இவ்வாரம் 2 ஆவது மனிதாபிமான உதவித் தொடர் வாகன அணியை அனுப்பவும் ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்….

Read More

சேயாவின் தந்தை, கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி அறிக்கை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையின் இரத்தமாதிரி அறிக்கையும் கைது செய்யப்பட்டுள்ள கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி  அறிக்கையும் இன்று மினுவன்கொடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கிண்ணியா உப்பாறு பகுதியில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது சுமார் 230 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழக கல்லூரி பிரதியமைச்சரின் நீண்ட கால முயற்சியின் பலனாக தற்போது இது நிறைவேறியுள்ளது….

Read More

கணக்கியல் சார்துறையின் பங்களிப்பு அபரிமிதமானது

-சுஐப் எம்.காசிம் – உலகப் பொருளாதார மந்த நிலையில் இருந்து நாடுகளை மீட்டெடுப்பதற்கு முகாமைத்துவ கணக்கியல்சார்துறை பெரும் பங்களித்து இருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுமாலை தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கணக்காய்வு மாநாடும், ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குப் பதிவியலில் சிறப்புத் தேர்ச்சி  பெற்றவர்களுக்கான விருது வழங்கலும் கொழும்பு, சினமன் லேக்சைட்  ஹோட்டலில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விருதுகளையும் வழங்கிவைத்தார்….

Read More

சீன நாணயத்தின் மதிப்புக் குறைப்பு

சீனா தனது நாணயமான யுவானின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பை 2 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளது.கடந்த மூன்று வருடங்களில் யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு கீழே சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இம்மாதிரியான திருத்தம், தொடர்ச்சியாக செய்யப்படாது என்றும் ஒரு முறை மாத்திரமே செய்யப்படும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், சீனாவின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், சீன மத்திய வங்கியின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியை மேம்படுத்த உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சீன…

Read More

கிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் -நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தமிழ் தேசிய நாளிதழ்களின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடும் போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியாலாளர்களுக்கும் அமைச்சருக்குமான சந்திப்பு…

Read More

மனைவியை சுட்ட விவகாரம்: சுழல் துப்பாக்கியும் ஆற்றிலிருந்தே மீட்பு

அத்துருகிரிய, இசுருபுரவில் தன் வீட்டில் வைத்து மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் பிரதீப் குமார தென்னசிங்கவை இராணுவ சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ய, இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணைகளை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தளபதி கட்டளையிட்டுள்ளார். அதேபோல, இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியாக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்…

Read More