Headlines

முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்

-சுஐப் எம்.காசிம்    – முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டதாலும், ஆயுதக் கலாசாரத்தின் அட்டூழியங்களைத் தாங்க முடியாததாலுமே, சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் தனிக்கட்சி அமைத்தார். எமக்கென்று ஒரு கட்சி வேண்டும், எமக்கென ஒரு குரல் வேண்டும், எமக்கென்று ஓர் இயக்கம் தேவை என்ற நோக்கிலே மர்ஹூம் அஷ்ரப் இந்தக் கட்சியை ஆரம்பித்து, தைரியமாக முஸ்லிம் சமூகத்தின்  அரசியல் பயணத்தை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்தார். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரியை அவர் பெற்றுத்தந்தார். பேரம்…

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More

நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பு, எவரது தாளங்களுக்கும் ஆடமாட்டேன் – கோத்தா

பிரிட்டனிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வழங்கிய உத்தரவாதத்தினையடுத்து விரைவில் இலங்கை வரவுள்ளார். இதேவேளை அவரிற்க்கு வெளிவிவகார அமைச்சில் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும தெரியவருகிறது. நோனிஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார், அதன் போது கோத்தா எந்தவித அச்சமுமின்றி நோனிசை இலங்கை வருமாறு தெரிவித்துள்ளார். நோனிசுடைய பாதுகாப்பிற்க்கு தான் பொறுப்பு என்றும், எவரையும் தாளங்களுக்கு ஆடுவதற்க்கு தான் அனுமதிக்க…

Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பாரிய நிதி மோசடி

அமைச்சர் தலதா அத்துகோரள இந்த விசேட குழுவை நியமித்துள்ளார். இக்குழுவில் 6 சட்டத்தரணிகளும் கணக்காளர் ஒருவரும், கணனி தொழில்நுட்ப நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசு காலத்தில் பணியகத்தின் நடவடிக்கைச் செலவாக 150 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனத்தில் பதவிகள், வழங்கியமை பிரசார நடவடிக்கைகளுக்கான செலவினம் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இக்குழுவின் விசாரணை அறிக்கைகளை 10 நாட்களில் அமைச்சரிடம் கையளிக்க வேண்டும் எனவும்…

Read More

பொதுபல சேனா அமைப்பின் பேஸ்புக் பக்கம் மீள் இயக்கம்

பொதுபலசேனா அமைப்பின் பேஸ்புக் பக்கம் இன்று முதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. பேஸ்புக் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்து பொதுபலசேனா அமைப்பின பேஸ்புக் பக்கம் கடந்த ஜுன் மாதம் முதல் பேஸ்புக் நிர்வாகத்தினால் அகற்றப்பட்டது. குறித்த சமயத்தில் பொதுபலசேனா அமைப்பின் பேஸ்புக் பக்கத்திற்கு 10,000 விருப்பங்களும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார  தேரரின் பேஸ்புக் பக்கத்திற்கு 15,000 விருப்பங்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. இந்த நிலையிலேயே குறித்த…

Read More

தேசிய புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு

– ஊடகப் பிரிவு – தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி. எம் கே பி தென்னக்கோன் மற்றும் தேசிய மட்ட புத்தாக்க சபையின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டனர்.

Read More

தேசிய சங்க சபை முன்வைத்த 15 கோரிக்கைகளை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்

இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்.. இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

நூடில்ஸில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் உரிய பரிசோதனை – றிஷாத் பதியுதீன்

இலங்கையில் உள்ள நூடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தியாவில் மெகீ நுாடில்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,அதனை இலங்கைக்குள் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார். நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –…

Read More

சிறந்த ஏற்றுமதியாளர் விருது நிகழ்வு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறந்த ஏற்றுமதியாளர் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் திறமையை வௌிப்படுத்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்டர் எஸ் யாப்பா தலைமையில் அமைந்த குழு சிறந்த ஏற்றுமதியாளர்களை தெரிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

பண்டாரவெளி வட்டார வேட்பாளரை ஆதரித்த அரபா நகர் மக்கள்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் பண்டாரவெளி வட்டாரத்தில் போட்டியிடும் எ.ஆர்.எம்.ரஸ்மினை, ஆதரிக்கு முகமாக பண்டாரவெளி பிரதேச மக்கள் வாழும் மிள்குடியேற்ற கிராமமான அரபா நகரில் இடம்பெற்ற கூட்டத்தில வேற்பாளர் றஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர். இதேவேளை, இம்முறை தேர்தலில் எமது கிராம மக்கள் ஒருமித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேற்பாளரை வெற்றி பெறச் செய்வது என்றும் அங்கிருந்த ஊர்பிரமுகர்கள் தெரிவித்தனர்….

Read More

“சவால் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் அதிகரித்த பிரதிநிதித்துவமே நன்மை பயக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

காலாகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்தவர்கள், வென்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் வை.கே.றஹ்மான் தலைமையில், மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலாவதாக களமிறங்கியபோது, குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர். ஆனால், கடந்த முறை…

Read More

தலைமைத்துவக் கட்டுப்பாடும் , தியாக சிந்தனையும்.    ஜனாப் றிப்கான் பதியுதீனின் இராஜினாமாவும்; அ.இ.ம.காங்கிரஸின் வழி காட்டலும்.  

வட மாகாண சபையின் உறுப்பினரும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியுமான கெளரவ றிப்கான் பதியுதீன் அவர்கள், கட்சியின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை 06/10/2017 திகதி , இராஜினாமாச் செய்துள்ளார். இதன் மூலம் ஒரு முக்கிய செய்தியை சமூகத்திற்கும் நாட்டிற்கும் வழங்கியுள்ளார். தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்கும்- கட்சியின் நலனுக்கும் சேவைகள் செய்வதற்கு பதவிகளும் அதிகாரங்களும் அணிகலன்கல்ல; என்பதைச் செயலில் காட்டியுள்ளார். தன்னுடைய கட்சி அரசாங்கத்தில் பங்காளியாகவுள்ள…

Read More