Headlines

சிறையில் கைபேசிப் பாவனைக்கு புதிய பாதுகாப்பு முறை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சில கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு முறையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சில கொலைகள், ஆட் கடத்தல்கள் மற்றும் கொள்ளை போன்ற பல குற்றங்கள் சிறைச்சாலைகளுக்குள் உள்ள கைதிகளாலேயே…

Read More

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை  862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன்  488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் செல்வாக்கு அதிகரிப்பு! கொழும்பு ஊடகம்

எதிரணிக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது பொதுவேட்பாளர் தரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் போது கடந்த மூன்று வாரங்கள் மைத்திரிபால சிறிசேன சார்பில் மேற்கொண்ட பிரசாரங்கள் மூலமாக அவர் பிரசித்தம் பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா மேற்கொண்ட பிரசாரங்கள் மூன்று வாரக்காலப்பகுதியில் சரிவடைந்து வந்தமை இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது…

Read More

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்; 

விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்! முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, இன்றைய தினம் (03) மன்னாரில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு…

Read More

பேசாலை கடற்கரை பூங்கா திறப்பு விழா!

மன்னார் பிரதேச சபைத்  தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில்,  வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பேசாலை கடற்கரை பூங்கா (Beach) திறப்புவிழா நேற்று (09) நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில் உறையாற்றிய தவிசாளர், பேசாலை கிராமமானது பல அரசியல்வாதிகளையும், பல பட்டதாரிகளையும் உருவாக்கிய கிராமம், இன்று பல தேவைகளைக் கொண்ட ஒரு கிராமமாக காணப்படுகின்றது. இக் கிராமத்திற்கு…

Read More

ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆசைபடுகிறார் – றிஷாத் பதியுதீன்

1983  ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சொத்தழிப்பு கலவரமாக அளுத்கம சம்பவம் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுங்கள் என்று ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து கொழும்பு ஆட்டுப் பட்டித்தெருவில் நேற்று இரவு இடம் பெற்ற…

Read More

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

கட்சி சின்னத்தை வைத்து நான் அரசியல் செய்யவில்லை – அமைச்சா் றிஷாத்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன்ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க வளாகத்தில் இடம் பெற்றபொதுக்கூட்டத்தில் இவ்வாறுஉரையாற்றினார். ‘இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி மக்கள் ஒரு செய்தியைசொல்லி இருக்கின்றீர்கள். கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்மாத்திரம் தான்…

Read More

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

அஸ்ரப் ஏ சமத் உலக வாழ் இந்துக்கள் உழவர் திருநாளாம் தைப்பொங்கள் திருநாளை இன்று (15) மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர் . இந்த வகையில் குறிப்பாக கொழும்பு வாழ் இந்து மக்கள் தமது வீடுகளையும் ஆலயங்களையும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி வீடுகளிலும், ஆலயங்களிலும் சக்கரைப் பொங்கள் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து குடும்பத்தாருடன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கு ஒப்பாக தை…

Read More

முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று -10- மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த…

Read More

ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம்!

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல்…

Read More

GSP+ நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண் டும் பெற்றுக் கொள்­வது தொடர்பில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முன் ­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் வழங்­கு­வது தொடர் பில் பரி­சீ­லனை செய்ய வேண்­டு­மாயின் இந்த நிபந்­த­னைகள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளதாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­குதல், தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­த­துதல், புதிய மனித உரிமை…

Read More