Headlines

காணிப்பிரச்சினையே அனைத்து முரண்பாடுகளுக்கும் அடிப்படையான நிலையை வடக்கில் தோற்றுவித்துள்ளது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பிரச்ச்pனையேயென்றும் இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றதெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மாவாட்டத்தில் சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி, பெரியமடு, காக்கையன்குளம் விடத்தல்தீவு, சன்னார், தலைமன்னார் பியர், மற்றும் முல்லைத்தீவு…

Read More

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த மாநாடு ஜனாதிபதியின் செயலாளரினால் கூட்டப்படவுள்ளது. முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக உயர்மட்ட முஸ்லிம் தூதுக்குழு ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துரையாடிய போதே இத்தீர்மானம்…

Read More

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன. ரமழான் பரிசு மழை நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

சுஐப் எம் காசிம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவில் அமைப்புக்கள் பல, சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும் வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா நிறுவனமும் இணைந்து நடத்திய ரமழான் பரிசு மழைப் போட்டியின் பரிசளிப்பு விழா மருதானை ஜம் இய்யதுஷ்ஷபா மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக…

Read More

கம்பனி வரலாற்றில் புதிய கம்பனிகளின் பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைப்பு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கம்பனிப்பதிவு புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, இந்தக் கட்டணக்குறைப்பு இலங்கையின் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கான முயற்சியாகும். 2016 ஆம் ஆண்டு நமது நாட்டில் 8289 புதிய கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டன….

Read More

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வேண்டும் பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு வடக்குக் கிழக்கில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை, அவ்விரண்டு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், குழுமங்களின்…

Read More

பாதிக்கப்பட்ட மறிச்சுக்கட்டி மக்கள் பாராளுமன்றில் அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று (03) மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து இந்த உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிச் சங்கப் பிரதிநிதிகளும் ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க, ஈ பி டி பி செயலாளர் நாயகம் டக்லஸ் தேவனந்தா, ஜனநாயக…

Read More

எதைச்செய்தாலும் வேற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமது சமுதாயத்துக்குக் கேடு.

  மினுவாங்கொடை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்.   -ஊடகப்பிரிவு நாம் எதைச் செய்தாலும் அதனை வேற்றுக் கண்ணோட்டத்தில் எப்போதும் நோக்கும் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமக்கு தொடர்ச்சியாக பாதிப்புக்கள் நேரிடுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் ருவைதா மதீன் எழுதிய “குடிபெயறும் கனவுகள்”கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு  நிதியுதவி வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று காலை 2017.05.02  நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச்சபை,சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடன் தனித்தனிஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்த உதவு தொகையை வழங்கியது.

Read More

ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் ரிஷாட்.

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2 ஆம், 3 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. இன்று (02) காலை கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர்  அலெக்ஸாண்டர் கார்ச்சேவ் அமைச்சர்…

Read More

நீறு பூத்த நெருப்பாகி இருக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தள்ளிப்போட வேண்டாம். வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்.

ஊடகப்பிரிவு மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (30) இடம்பெற்ற் ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையில் பல கட்சிகள் கூட்டாக இணைந்து…

Read More

பூர்வீக நிலங்களை இழந்து தவிப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மேதின செய்தியில் அமைச்சர் ரிஷாட்.

-ஊடகப்பிரிவு தொழிலாளர் வர்க்கத்தினரின் நல உரிமைகளுக்காகப் போராடும் இன்றைய நாளில் வடக்கு கிழக்கில் வாழ்வுரிமைகளையும் பூர்வீக நிலங்களையும் பறி கொடுத்து வீதிகளிலே தவிக்கும் அப்பாவி மக்களின் விடிவுக்கு வழி கிடைக்க ஒருமித்து குரல் எழுப்புதுவது அனைவரதும் கடமையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மே தினத்தையெட்டி அவர் விடுத்திருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, மே தினம் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளினதும் தொழிலாளர் அமைப்புகளினதும் ஜனரஞ்சக நிகழ்வாக உருமாறிவிட்ட இந்தக்…

Read More

மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர பிரகடனம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி முடிவு

ஊடகப்பிரிவு மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமனிப் பிரகடனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராயவென சுயாதீன குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குழுவில் உள்ளடக்கும் வகையில் பெயர் குறிப்பிட்ட பிரதிநிதி ஒருவரை தந்துதவுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கோரியுள்ளது. அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன கையெழுத்திட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எழுதியுள்ள…

Read More