Headlines

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

– சுஐப் எம்.காசிம் –  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…

Read More

முஸ்லீம் காங்கிரசின் கொழும்பு பெண்கள் பிரிவின் சர்வதேச மகளிா் தின நிகழ்வுகள்

அஸ்ரப் ஏ சமத் முஸ்லீம் காங்கிரசின் கொழும்பு பெண்கள் பிரிவின் சர்வதேச  மகளிா் தின நிகழ்வுகள்  நேற்று கொழும்பு முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில்  தாருஸ்சலாமில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சா் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் அஸ்லம், முத்தலிப் பாருக், மேல் மாகாணசபை உறுப்பினர் அர்சத் மற்றும் மகளிா் உறுப்பினர்களும் கலந்து கொண்டனா்.

Read More

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது

சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மரத்தினால் ஆன இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும். எனவே, உலகிலேயே மிக உயரமான மரத்தினால் ஆன…

Read More

புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது

புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வண்ணாத்திவில்லு காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் டேற்கொண்ட சுற்றவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வலுவான ஆதரவை, அமெரிக்கா வழங்கும் – ரணிலிடம் நிஷா

சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள்…

Read More

மீண்டும் நேபாளத்தை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: பலி 42 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதியம் சுமார்12.30 மணியளவில் தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் 7.3-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக இருந்தது…

Read More

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டம் சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. சவூதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அங்கிருந்த பொறுப்பதிகாரியிடம் தேசிய சங்க சம்மேளனம் கையளித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்வு…

Read More

இரண்டாவது ஆசனத்தினை பெற நகர்ந்து கொண்டு செல்கின்றோம் – சிராஸ் மீராசாஹிப்

– முஹம்மட்- பொத்துவில் பிரதேசம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்து தவிக்கின்ற நிலையையும், கடந்தகால மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபையில் போட்டியிட்ட எமது மாமாவை தோற்கடிக்க சதித்திட்டம் செய்த தலைமையை நாங்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இந்த இடத்திலே மிகவும் சோகமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளளேன். இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்திலே முதல் தடைவையாக இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற கட்சிகளுக்கு சவாலாக களம் இறங்கியுள்ளது அதன் முதன்மை…

Read More

நாட்டில் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளது

நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பேரிம்பநாதன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதன்கான வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று நேற்று  யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதியானது!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர்களில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அக்கட்சி பிரதிநிதிகளிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளார். எனவே, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி…

Read More

ஆடம்பர வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்ற பாடகி

“Love and Hip Hop” பாடகி, நியா லீ (Nyalee) தனது ஆடம்பர இசையுலக வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்றார். “நான் உண்மைகளை அறிவதற்காக பதில்களை தேடினேன். அதை இஸ்லாத்தில் மிக அழகாக கண்டுகொண்டேன்.” Instagram பக்கத்தில் தனது மாற்றத்தை வெளியிட்டுள்ள இவர், இது இரண்டுவருட தேடலின் முடிவாகும் என்று கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு, அல்லது அதன்படி வாழ்வதற்கு உரிமையுண்டு. இது எனது சொந்த முடிவாகும் என்றும் கூறியுள்ளார் நியா லீ. Love…

Read More

அனைத்து அரச ஊழியர்களும் மைத்திரிக்கே வாக்களியுங்கள்- றிசாத் பதியுதீன்

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் ஜனநாயகம் வளரவும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் பாதுகாப்பு, சுய கௌரவம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இன்று  (2014-12-23) இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்கிளித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Nதிசயத் தலைவர் ரிசாத் ;பதியுதீன் அரச ஊழியர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது – இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப்…

Read More