Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதினால் இலங்கை சட்டக் கல்லூரிக்கு நீர் குளிரூட்டும் இயந்திரம் வழங்கிவைப்பு

இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் வேண்டுகோளுக்கினங்க கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமாகிய அமைச்சர் றிசாட் பதியுதினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கென 88,000ரூபா பெறுமதியான நீர் குளிரூட்டும் இயந்திரம் ஒன்றை தனது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கிவைத்தார். இந் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் ‘அமைச்சரிடம் நாங்கள் இவ் வேண்டுகோளை முன்வைத்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான காசோலையை எம்மிடம் கையளித்தார். இதன் மூலம்…

Read More

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” வரக்காபொலையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில், கைத்தொழில், வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு வரக்காப்பொலயில் நேற்று (30) இடம்பெற்ற போது, பிரதம…

Read More

டுபாய் விமானத்தில், நச்சுப் பாம்பு!

துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று பிடிபட்டதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் பிரதேச காடுகளில் வாழும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகை விஷப்பாம்பு ஆப்பிரிக்க நாடுகள், ஓமன், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படும். இந்நிலையில், இந்த விஷப் பாம்பு எவ்வாறு துபாய் விமானத்தில் புகுந்தது என்பது பற்றி எந்த தகவலும்…

Read More

அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜிதமுனி சொய்சா ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் கடிதம்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரினை குழாய் கிணறுகள் மூலம் பெற்றுக் கொள்ள தேவைாயன வசதிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கையெடுப்பதன் அவசியம் தொடர்பில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விவசாய அமைச்சர் துமின்த திசநாயக்க மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா ஆகியோரிடத்தில் வேண்டுகோளை முன் வைத்து…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை துருக்கி அரசு பொதுமக்கள் துணையுடன் முறியடித்தது. இந்த ராணுவ புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு…

Read More

மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்க G – 20

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் பொருட்டு G-20 (Group 20) எனும் புதிய அணியொன்றை உருவாக்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் தலைமைத்துவச் சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். கரு ஜெயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, தலதா அதுகோரள, ஜோசப் மைக்கல் பெரேரா, பாலித ரங்க பண்டார, ஜோன் அமரதுங்க…

Read More

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா காலமானார்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா தனது 87 ஆவது வயதில் நேற்று (15) காலமானார். இவர் நேபாளத்தின் அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் இருந்தவராவார். அத்துடன் பிரதமர் பதவியில் சுமார் 05 முறைகள் பதவி வகித்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த  மார்ச் 29 ஆம் திகதி இந்தியாவின் ஜேகார்ன் மாநிலத்திலுள்ள மெடன்ரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அந்த வைத்தியசாலையிலேயே நேற்று (15) இவர் உயிரிழந்துள்ளார். ஆயினும்…

Read More

இனவாத ஊடக அராஜகத்துக்கு எதிரான ராவய பத்திரிகையின் சாட்டையடி!

ஏ எம் எம் முஸம்மில். – பதுளை     இந் நாட்டு மக்களின் நல்லபிமானத்தை பெற்ற, ஊடகத் துறையில் பல இமாலய சாதனைகளை மேற்கொண்ட, இந் நாட்டின் பல ஆட்சி மாற்றங்களுக்கு அச்சாணியாக செயற்பட்ட ராவய பத்திரிகை சிங்கள ஊடகத்துறையில் ஒரு பிரபலமான பத்திரிகையாகும் . இப்பத்திரிகையின் ஊடகவியலாளரான மஹிந்த ஹத்தக  கடந்த வாரம் “வில்பத்து காடழிப்பு” புரளியின் உண்மைத் தன்மைகளை கண்டறியும் நோக்கில் மரிச்சுகட்டி பிரதேசத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு  கடந்த வார ராவய…

Read More

சாட்சியமளிக்க அனுமதி கோரி, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் அவர்களினூடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ரிப்கான் பதியுதீனின் சட்டத்தரணி அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளர் ஒருவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய…

Read More

வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை

நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார். வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள் இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி மீண்டும்…

Read More

சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து அமைச்சர்களான ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

ஊடகப்பிரிவு  சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், அகில விராஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது,  இது தொடர்பில் அந்த பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு…

Read More