Headlines

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!!

நாட்டின் அரசியலமைப்பை மீறி, பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து, சட்டத்துக்கு முரணான முறையில்,…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை! குற்றவாளியை நெருக்கியுள்ள பொலிஸார்

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களது புகைப்படங்கள் இரண்டு தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read More

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம்!

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “கௌரவ முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான எனது உறவினரும் நெருங்கிய நண்பருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்ட செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது தந்தை வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்ட நண்பர்…

Read More

புதிய பிரதமர் பதவியேற்பு ;சுவாரஷ்யமான சந்திப்புக்கள்

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) காலை பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஜனதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்கள் அவர்கள் உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Read More

வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்.. டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகரசபைத் தேர்தலில், ரஹ்மானிய வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸில் போட்டியிடும் வேட்பாளர் மஹ்தியை ஆதரித்த கூட்டம் நேற்று மாலை  (05) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தகது.        …

Read More

இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் – ஞானசாரர்!

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள பௌத்த மத உரிமைகளை உறுதி…

Read More

ஓட்டமாவடி மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம்  நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Read More

பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போதைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தின் பின்னர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைக்கு பான் கீ மூன்…

Read More

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்-  அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்    – இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற மீனவர்கள், இன்னும் கஷ்டங்களையே சந்தித்து வருவதாகவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனை புனித லூசியாஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். அதிபர் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வடமாகாண அமைச்சர்…

Read More

முஸ்லிம்கள் தொடர்பில் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பதில்

இலங்கை முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார உப செயலாளர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா இதனை தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம் ஒன்றிற்கு பதில் வழங்கும் நோக்கிலேயே…

Read More

தொலைபேசி கட்டணங்களில் வற் வரி சேர்க்கப்படாது!

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்….

Read More

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு றிஷாத் பதியுதீன் வாழ்த்து

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். இந்தப் பரீட்சை உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பரீட்சையென்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களின் குடும்பத்தார் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்களை படிப்பித்து இந்தப் பரீட்சைக்கு தயார்படுத்தி அனுப்பியுள்ளனர். அவர்களின் கனவுகளை நீங்கள் நனவாக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் குருவானார் றிஷாத் பதியுதீன் 

Read More