Headlines

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலுக்கு  ஒலிபெருக்கித் தொகுதி கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலிற்கான ஒலிபெருக்கித் தொகுதியினை அண்மையில் கையளித்தார்.

Read More

‘இன‌வாதிக‌ளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌லைமையிலான‌ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன்வர வேண்டும்’ உலமா கட்சித் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என‌ அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளும் ஐக்கிய தேசியக் கட்சியுட‌ன் இணைந்தே உள்ள‌ன‌ என்ற ய‌தார்த்த‌தை முஸ்லிம்க‌ள் இன்ன‌மும் புரிந்து கொள்ள‌வில்லை. இவ்விரு க‌ட்சிக‌ளும் ஐ.தே.க வுடன் இணைந்தே மைத்திரியை ஜ‌னாதிப‌தியாக்கின‌. இரு க‌ட்சிக‌ளும் ஐ.தே.க வுட‌ன் இணைந்தே  ஐ.தே.க‌ த‌லைவ‌ர் ர‌ணிலை பிர‌த‌ம‌ர் ஆக்கின‌. இந்த‌ நிலையில் ம‌யில் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌லால், ம‌ர‌ம் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌ராமா என‌ ச‌மூக‌ம் கேட்ப‌து அத‌ன்…

Read More

ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இலங்கை வருகை

–எம்.ஐ.அப்துல் நஸார்– ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று  (03) இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய அரசாங்கத்தின் கீழும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்கத்தின் உயர்…

Read More

கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு

கட்டாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வரவேற்பு. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு- *இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), இரவு 8 மணிக்கு, ஸைடூன் ரெஸ்டோரண்ட், சல்வா வீதி, டோஹா கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள் கீழ் உள்ள தொலைபேசி…

Read More

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. “இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த…

Read More

பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது

புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காராம விகாரையில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இன, ஜாதி,மத பேதங்களை புறந்தள்ளி விட்டு ஒத்துழைப்புடன் நல்லிணக்கமாக செயற்படும் காலம் வந்துள்ளது. இலங்கை தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக மாறியுள்ளது. நான் பாடசாலை செல்லும் போது நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர்…

Read More

12 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் ,பிரதம அதிதியாகவும் மன்னர் பிரதேச செயலாளர் வசந்தகுமார் கெளரவ அதிதியாகவும் மன்னார் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சமியு முஹம்மது பஸ்மி, பேசாலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் பேசாலை ஐக்கிய தேசியக்கட்சி போர்ஜியா பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு…

Read More

பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை.!

இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். என்.கே. இலங்கக்கோன் கடந்த 12 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தரவின் பெயரினை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (16) மதியம் 2.30 மணியளவில், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த…

Read More

இடமாற்றம் பெற்றவர்கள் உடனடியாக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமைக்குள் கடமைகளைப் பொறுப்பேற்கா விட்டால் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். ஏற்கனவே வருடாந்த இடமாற்றத்தில் 13 பேரும் கடந்த வாரத்தில் 26 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் யாரும் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. எனவே இவர்கள் உடனடியாகத் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தின் கீழ் 123 ஆசிரியர்கள் கல்குடா வலயத்திலிருந்து வேறு…

Read More

இந்தியாவின் புத்தகயா மீதான தாக்குதல் கண்டிக்கத்தகது-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இந்தியாவின் புத்தகாயாவில் உள்ள பௌத்த மதத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது வேதனை தரும் ஒன்றாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மொரீஸியஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பிற்பகல் நாடு திரும்பினார். மதங்கள் மனிதர்களை நேர்வழிப்படுத்தவே தோற்றம் பெற்றன.அகிம்சை,கருணை,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் என்பதை எடுத்துயியம்பிவரும் மதங்கள்,ஒரு போதும்,பிரிவினை வாதத்துக்கும்,இன முரண்பாடுகளுக்கும் வித்திடுமாறு கோறவில்லை என்பதை…

Read More