சந்திரிக்காவும் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார். TM
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார். TM
தி/கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கான நிழற்படப் பிரதி (Photo copy machine) போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் (16) பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் முஸம்மில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் ஆகியோர்களும் பிரசன்னமாகியிருந்தனர்..
பஹ்ரைனில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர், தான் பணி புரிந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லு முன், வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 48 வயதான குறித்த இலங்கை பணிப்பெண் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, தனது அறையில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த பணிப் பெண்…
கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் பழைய மாணவரொருவரின் சடலமாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். அவர்ளுடன், பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…
மஹிந்த ராஜபக் ஷவிற்கு மீண்டும் நாட் டில் ஆட்சிக்கு வர முடியாது. அரசியலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, தனிப்பட்ட ரீதியில் மஹிந்த மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அவரது குடும்ப ஆக்கிரமிப்பு அரசியல் கொள்கைகளை எதிர்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
நேற்று புதன்கிழமை ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். இதன்போது சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிரான வான் தாக்குதல் அடிப்படையிலான யுத்தத்தில் அமெரிக்க மிக வலிமையாக இருப்பதாகவும் ISIS இயக்கம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மான வரைவு ஒன்றையும் தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் ஒபாமா அனுப்பியுள்ளார். நேற்று மதியம் ஒரு பத்திரிகையாளர்…
(விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி) சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும்…
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்குதலாகும். இந்த தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் பழி முஸ்லிம்கள் மீது சுமாத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு போரையே அமெரிக்க நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், இந்த தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற உண்மையை ஒரு யூதகுருவே சில தினங்களுக்கு முன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். பிரிட்டனை சார்ந்த ஸ்டீபன் ஸீஸர் என்ற அந்த யூத குரு செப்டம்பர் 11 தாக்குதல் முழுக்க முழுக்க…
பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கையின் வடபகுதியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மன்னாரில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பார்வையிட பாகிஸ்தான் தூதுவர் மன்னார் விஜயம் செய்த வீடியோ காட்சி.
காலம்சென்ற சோபித்த தேரரை நினைவுகூறும் முகமாக, அனுராதபுரம் விலச்சி பிரதேசத்தில் சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகள் அமைத்து ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் (27) இடம்பெற்றது. இவ் வீட்டுத்திட்டத்துக்காக இந்திய அரசு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பி.ஹெரிசன், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் தயா கமகே பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, அகில இலங்கை மக்கள்…
புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று இன்று காலை தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.