Headlines

யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தலைமையில் இப்தார் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் தலைமையிலான, இப்தார் நிகழ்வு இன்று (10) புதிய சோனகத்தெரு மஸ்ஜிதுல் அபூபக்கர் பள்ளியில் இடம்பெற்றது. மவுண்டன் ஓப் மேசி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில், யாழ் மாநகர சபை மேயர் திரு. இமானுவேல் ஆர்னோல்ட், ஏனைய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர். (ன)    

Read More

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 10 கிலோகிராம் நிறையுடைய 5 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். tksvk

Read More

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குப்பைக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கருப்புப்பட்டியுடன் பதாதை ஏந்தி எதிர்ப்பு!

கொழும்பில் இருந்து புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட உள்ள குப்பைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் நேற்று (18) கல்பிட்டி பிரதேச சபையின் 07 வது அமர்வின்போது, தனது எதிர்ப்பினை கருப்பு நிறப்பட்டி அணிந்தும், “புத்தளம் கொழும்பின் குப்பைத்தொட்டியல்ல” என்ற வாசகத்துடனான பதாதை ஏந்தியும் வெளிக்காட்டினார். பின்னர் இதுப்பற்றி அவர் சபையில் கருத்துத்தெரிவிக்கையில், கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குப்பைகள் மருத்துவக்கழிவுகளும் இரசாயனக்கழிவுகளும் பிளாஸ்த்திரிக் கழிவுகளுமே இக்குப்பை…

Read More

புனிதமிகு ரமழானை வரவேற்க!

– அபூ உமர் அன்வாரி BA – இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு முக்கியமான ஒன்று.இதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு  பல சிறப்பம்சங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். நன்மை செய்வதற்கான பல விடயங்களையும் எமக்கு நபிவழியின் மூலம் காணபித்துள்ளான்.ஆகவே ஒவ்வொரு விசுவாசியும் இதை நல்ல முறையில் பயன் படுத்துவதற்கான ஆயத்தங்களை இப்போதிலிருந்து செய்யவேண்டும்.இதற்கென வீடுகளை சுத்தம் செய்து தூசிபடிந்த  குர்ஆனை துடைப்பதும் மாத்திரம் அல்ல.மாறாக  எத்தகைய  நல்ல செயற்பாடுகளை செய்தால் இந்த  புனித மிகு ரமழானை பயனுடையதாக அமைத்து…

Read More

புத்தளம், முதளைப்பாளி, அல்-மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, அல் – மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா, இன்று  வெள்ளிக்கிழமை (23) முதளைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் Z.A.தௌபீக் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.T.M.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் மௌலவி…

Read More

‘கல்முனை முதல்வர் பதவியை என்னிடமிருந்து மு.காவினர் பறித்தெடுத்தனர்’ சிராஸ் மீராசாஹிப்!

-எஸ்.அஷ்ரப்கான்- மக்களால் தெரிவுசெய்யப்பட்டு கல்முனை முதல்வரான என்னிடமிருந்த பதவியை 2 வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸினர் பறித்தெடுத்தார்கள் என முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும்,  லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கவலை தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வட்டாரம் 17ல் போட்டியிடும் எம்.ஐ.எம்.அப்துல் மனாபினை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிராஸ்…

Read More

வேதாந்தி சேகு இஸ்ஸத்தீன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைகின்றார்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸத்தீனை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. மு.காவின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்துகொண்டு…

Read More

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இப்னு ஜமால்தீன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் தீர்ப்பானது சாட்டையாக அமைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று முன்தினம் கிராண்ட்பாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்தார். இப் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக்…

Read More

மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு சென்று கேட்டறிந்து உரிய தீர்வுக்கு வழிகோலுங்கள்

அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை சரியாக வழங்க வேண்டுமென இன்று (03.07.2017)வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது அமைச்சரும், இணைத்தலைவருமான ரிஷாட்ப தியுதீன் அறிவுறுத்தினார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடிந்து கொண்டார். கூட்டத்திற்கு சமூகமளிக்காத…

Read More

97 ஆவது இடத்தைப் பிடித்தது

பூகோள அமைதிச் சுட்டியில், சிறிலங்கா ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், பூகோள அமைதிச் சுட்டி-2016 (Global Peace Index) என்ற தரவரிசைப் பட்டியலிலேயே சிறிலங்கா 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 163 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறிலங்கா 18 இடங்கள் முன்னேறியிருக்கிறது. இந்தப் பட்டியலில், மிகவும் அமைதியான நாடாக- ஐஸ்லாந்து முதலிடத்தில்…

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை கடந்த சில வருடங்களாக நட்டத்தில் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக அண்மையில் இந்த விமான சேவைக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு, தொட்டலங்க…

Read More

ஆண் பாதுகாவலர் இன்றி வரவேண்டாம் – சவூதி அரேபியாவின் எச்சரிக்கை..!

புனித ஹஜ் கடமைக்காக சட்டபூர்வ ஆண் பாதுகாவலர் இன்றி 45 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களை அழைத்துவரும் விமான சேவைகள் மீது சவூதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறும் விமான சேவைகள் மீது 50,000 சவூதி ரியால் (17,35000 ரூபா) அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஆண் பாதுகாவலர் இன்றிவரும் யாத்திரிகர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம்…

Read More