அமைச்சர் றிஷாட்டின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்தும் பயணிப்பேன்.. வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை என்கிறார் சிராஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அரசியலில் இருந்து தன்னை ஓரங்கட்டுவதற்காக சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த புனைகதைகளை நம்பவேண்டாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும் முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கரங்களை பலப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நல்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார். அண்மைக்காலமாக வேண்டுமென்றே தன்னைப்பற்றி பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தான் கட்சி…
