Headlines

2016 க்கு முன் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்வேன் – முன்னாள் பிரதம நீதியரசர்

2016ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்று முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளர் குறித்த முயற்சியை மேற்கொண்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யப்போவதாக சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பின் 31.2 சரத்தின்படி இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடமுடியாது. எனினும் இது 2010ஆம் ஆண்டில் 18வது சீர்திருத்தம் மூலம் மாற்றம்…

Read More

அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்

ஐ.எஸ். வாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார். அவர் ஆப்கானிஸ்தான் செல்லும் வழியில் விமானத்தில் பயணம் செய்யும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Read More

உலகை ஆளும் ஒரு குட்டி நாடு?

அது  ஒரு  குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ? காரணங்கள் பல உண்டு. திருமணம் செய்வதென்றால் அவர்கள் ஏதாவது ஒரு துறையில் Doctorate பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம். கல்லூரியில் சேர முதலில் 5000 டொலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டொலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால்…

Read More

பலஸ்தீன மக்களின் சுதந்திரத் தாகம் பற்றி ஐன்ஸ்டீன்

எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத் தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன் . யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும்,…

Read More

இளைஞர் பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு 30 மற்றும் 31ம் திகதிகளில்…

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கை இளைஞர் 2ஆவது பாரளுமன்றத்தின் 10ஆவது அமர்வு எதிர்வரும் 30 மற்றும் 31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார். இப்பாராளுமன்ற முதல் நாள் அமர்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் திருமதி ரெபின் மூடி கலந்து கொண்டு விசேட உரையாற்றவுள்ளார். முதல்…

Read More

லெபனான் நாட்டு போராளிக் குழு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இஸ்ரேல்- லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள கிர்யட் ஷ்மோனா மற்றும் மெடுலா நகரங்களின் மீது லெபனான் போராளிகள் 2 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்த இஸ்ரேல், லெபனான் எல்லையோரமுள்ள பகுதிகளில் போர் விமானங்களின் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி…

Read More

‘எபோலாவுக்கு பரீட்சார்த்த- மருந்து வழங்கத் தயார்’: ஜப்பான்

(BBC) மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக, பரீட்சார்த்த வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. T-705 அல்லது அவிகான் (Avigan) என்ற ஒருவகை சளிக்காய்ச்சல் மருந்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. எபோலாவுக்கு எதிராக இந்த மருந்து தொழிற்படுமா என்பதில் இன்னும் தெளிவில்லை. ஆனால், குறித்த வைரஸ் தொற்றுகளுக்கு இடையே உள்ள ஒத்த இயல்புகள் காரணமாக, இந்த மருந்து பயனுள்ளதாக அமையும் என்றே அதனைத் தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது….

Read More

இஸ்ரேல் உளவுத்துறையை விட எங்களது உளவுத்துறை சக்தி வாய்ந்தது – ஹமாஸ்

Abusheik Muhammed 1.இஸ்ரேல் உளவுத்துறையை விட எங்களது உளவுத்துறை சக்தி வாய்ந்தது. 2.இதனால் தான் எங்களுக்குள்ளேயே இருந்து இஸ்ரேலுக்கு தகவல் வழங்குவோரை கைது செய்ய முடிந்தது . 3.நாம் எங்களது கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். முற்றுகை நீக்கப்பட வேண்டும். 4. உணவையும் மருந்தையும் காஸாவுக்குள் கொண்டுவருவது எங்களது உரிமை. யூத குடியேற்றங்களும், முற்றுகையும் தான் இஸ்ரேலுடனான எங்களது போராட்டத்துக்குக் காரணம். 5.இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையில் எந்த பிரயோசனமும் இல்லை.எங்களது எதிரிகளை நாங்கள் அறிந்து கொண்டுவிட்டோம். 6.எங்களது போராட்டத்தின்…

Read More

கொழும்பில் மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி திறக்கப்பட்டது (படங்கள்)

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புறக்கோட்டை பஸ்ரியான் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி இன்று (25) மாலை உத்யோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.   சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்களஸ் தேவானந்தா, ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த சில்வா, ஏ.எச்.எம்.அஸ்வர், மற்றும் மாகாண சபை…

Read More

சீரற்ற காலநிலையால் மூவர் மரணம்

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. தங்காலைப் பிரதேசத்தில் இருவரும், யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொனராகலை மாவட்டத்தை தாக்கிய வறட்சி மற்றும் கடும் காற்று காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது. மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் வறட்சி காரணமாக 53 ஆயிரத்து 512 குடும்பங்களும் கடும் காற்று காரணமாக…

Read More

பங்களாதேஷ் இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் சாதனை..!

மனித உணர்வுகளை அறியும் கணினி மென்பொருளை வங்கதேச விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். வங்கதேசத்தின் இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். இது பற்றி அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.எஃப்.எம். நஜ்முல் ஹக் நஹின் கூறியது: கணினியைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டு இரண்டு விதத்தில் மனித உணர்வுகளை அறிந்து கொள்ளலாம். விசைப்பலகை பயன்பாடு, அதனைக் கொண்டு உருவாக்கும் எழுத்து அல்லது உரை வடிவம் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மனித உணர்வுகளை அறியலாம். முதல் முறையாக, இந்த இரு…

Read More

இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் தீர்மானம்

இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தெற்காசிய நாடுகளின் சமூத்திரக் கண்காணிப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் பிரதமர், இதற்குத் தேவையான திட்டங்களை இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Read More