Headlines

பாராளுமன்றம் கலைக்கப் பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!:10 ரஷ்யத் துருப்புக்களைக் கைது செய்தது அரசு

திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஆக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் தேசிய இணக்கப் பாட்டைக் கொண்டு வரக் கூடிய எந்தவொரு முடிவிலும் ரஷ்யா பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனுக்கு இவ்வாரம் 2 ஆவது மனிதாபிமான உதவித் தொடர் வாகன அணியை அனுப்பவும் ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்….

Read More

பேஸ்புக்கில் அண்ணன் செய்த வேலையால் யாழில் அடிவாங்கிய தம்பி

கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து, யாழ். கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதான சகோதரன், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். இதேவேளை, தாக்குதல் நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அதே இடத்தைச் சேர்ந்த இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 24…

Read More

நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 90நாள்!

நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 90 நாள் நிறைவடைகிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் நிழல் போல ஊழல் கரையும் படிந்து காலத்தோடு நகர்ந்து வந்தது என்பதை பலரும் மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், திட்டமிட்டு அயராது பிரச்சாரம் செய்து, காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை நரேந்திர மோடி அள்ளினார் என்பதையும் பலரும் மறுக்க மாட்டர்கள். இப்படிப்பட்ட சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து…

Read More

 8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கையெழுத்து இடப்பட்டது… அல்லாஹு அக்பர் ….

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால ஒப்பந்தத்தத்தில் கைச்சாதிடப்பட்டுள்ளது. 1 -காஸா மீது யூதபயங்கரவாதிகளின்முற்றுகை முழுமையாக விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல். 2-சர்வதேச நாடுகளின்மேற்ப்பார்வைகளின் கீழ் காஸா புனரமைப்பு. 3- மின்சார பிரச்சினைகளை முழுவதுமாக காஸாவின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்குதல். 4- காஸாவுக்கான கடல் எல்லையில் இருந்து மீன் பிடித்தல்களை 96 மைல்களில் இருந்து அனுமதித்தல். 5- காஸாமீதான நிதி தடைகளை முற்று முழுதாக நீக்குதல்….

Read More

‘முஸ்லிம்கள் ஜெயித்தனர்’ அடிபணிந்தது இஸ்ரேல்

பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்  – அபூ ஸஹ்ரி,  பேச்சாளர், ஹமாஸ்  1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு 2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம். 3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம் 4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை…

Read More

காஸாவில் வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கம்..!

26-08-2014 இரவு காஸாவில் இஷா தொழுகைக்கான பாங்கோசைக்குப்பிறகு பெருநாளுக்காக கூறப்படும் தக்பீரைப் போன்று தக்பீர் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்தே இவ்வாறு வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கமும் கூறப்பட்டுள்ளது.

Read More

இலங்கைக்கு எதிராக ‘டெசோ’ தீர்மானம் நிறைவேற்றம்

தமிழீழ ஆதரவாளர்களுக்கான டெசோ கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில்  இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்வதேச விசாரணை குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா…

Read More

அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாகவே பேச்சு

ஊவா மாகாண தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய,அனைத்துக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேசாமல்,ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாகவே பேசவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் நாளையும்,நாளை மறுதினமும் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (DC)

Read More

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு ; பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

திவிநெகும திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மவாட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுக அபிவிருத்தி குழு தலைவர்கள் ஆககேயார்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்  உரையாற்றுவதை படத்தில் காணலாம்.  இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் , வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்து…

Read More

யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரை வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் முகநூலில் வைரஸ் போன்று பரப்பப்பட்டது. தாம் அணிந்திருந்த ஆடை குறித்து, அந்த இளைஞன் கூறிய வார்த்தைக்காகவே யுவதி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இளைஞர் எவ்வித எதிர்ப்புகளையும் அதன்போது வெளியிடவில்லை. 30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமார்…

Read More

தேனீருக்காக கோப்பியையும் கோப்பிக்காக விஸ்கியையும் கூட்டமைப்பினர் கோருவார்கள்: டக்ளஸ்

இந்திய இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தேனீர் வேண்டுமா? என்று கேட்டால் கோப்பி வேண்டும் என்பார்கள். கோப்பி வேண்டுமா? என்று கேட்டால் அவர்கள் விஸ்கி வேண்டும் என்பார்கள். அதாவது அவர்கள் தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது. அரசாங்கம் 13வது சரத்தை அமுல்படுத்தினால் அதன்போது கூட்டமைப்பினர் தமது கோரிக்கையை மாற்றிக்கொள்வார்கள் என்று…

Read More

விளையாட்டுத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கிவைப்பு

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத் துறைகளில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை இன்று மன்னார் நகர சபையில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கி வவைக்கப்பட்டது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் , விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமயிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க குறித்த உதவித் தொகை மன்னார் மவாட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் 170 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read More