Headlines

மருத்துவர்கள் சிவப்பு அறிக்கை விடுப்பு : நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.!

நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இதன் முதற்கட்டமாக நாளை அம்பாறை வைத்தியசாலையின் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயளாலர் வைத்தியர் நாலின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அனைத்து மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்…

Read More

‘மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, இணைந்து பயணிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்’ – ஆப்தீன் எஹியா!

புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, நாம் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து கட்சிகளினதும் உயர்பீட உறுப்பினர்களை, அவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம் எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார். நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற, கரம்பை வட்டார இளைஞர் அமைப்பினருடனான…

Read More

வெள்ளத்தில் மூழ்கியது பேலியகொடை மத்திய மீன் சந்தை

பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வாயிற் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று(16) அதிகாலை பொருட்களை கொண்டு வந்த லொறிகளும், மீன்கள் கொண்டுவந்த லொறிகளும் சந்தையின் உட்பகுதிக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதாக பேலியகொடை மீன் சந்தை சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெள்ள நிலைமை காரணமாக மத்திய மீன் சந்தைப் பகுதியின்…

Read More

முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளை அரசு உடன் தீர்த்து வைக்க வேண்டும்

-ஜாவித் – இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை இந்த நாட்டில் எதுவுமற்ற ஒரு சமுகமாக ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கின்றன. இது ஒரு ஆபத்தான செயற்பாடுகளாகவே இருப்பதை காண முடிகின்றது. இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் எதிரிரொலியாக பாதிக்கப்பட்ட மற்றொரு சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது கடந்த கால அரசாங்கங்களால்கூட…

Read More

அனைத்து மக்களதும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே அரசின் கொள்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அஞ்சப் போவதில்லை. 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தெளிவானதும்…

Read More

குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜரானார் ஜீ.எல். பீரிஸ்

முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார்.

Read More

வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கணிப்புக்கு அனுமதி

– எஸ்.ரவிசான் – தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள  புதிய அரசியலமைப்புக்கு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் கருத்துக்கள் உட்பட யோசனைகளை பெறுவதற்கு  பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்தது. வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை காணொளி அழைப்பு மூலமாக பெற்றுகொள்வதற்கு போதுமான வசதி எம்மிடம் காணப்படாத நிலையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

Read More

வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

மன்னார், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (15) வவுனியா ஓவியா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலி, மன்னார், மாந்தை, மற்றும் நானாட்டான் உட்பட வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (ஐ)  

Read More

சுதந்திர கட்சி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார்…

Read More

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று (6) பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை…

Read More

நாட்டை நேசிக்கும் அனைவரும் திரள்க – ராஜித

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதும் யுகத்தை ஏற்படுத்த அணி திரளுமாறு நாட்டை நேசிக்கும் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடை பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையயழுத் திட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ச­வை தோற்கடிக்க முடிந்தது. 100 நாள்களில் தியாகங்களை…

Read More