Headlines

ஐ.எஸ்.ஐ.எஸ்சை அழிக்க அமெரிக்கா அடுத்த திட்டம்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் புதிய போர் செயல்திட்ட உத்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான அறிவிப்பை புதன்கிழமை அன்று வெளியிடவுள்ளேன். இருப்பினும் இந்த அறிவிப்பில் அவர்களுக்கு எதிரான அமெரிக்க தரைப்படைகளின் தாக்குதல் தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாது. இவர்களுக்கு எதிரான சண்டையை ஈராக் போர் என்று கூறிவிட முடியாது. இது கடந்த 7 வருடங்களாக அமெரிக்கா…

Read More

மோடியின் பாராட்டை பெற்ற சானியா

அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துகள். இந்த சாதனை குறித்து நாங்கள் பெருமையடைகிறோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிக்கு முன்னேறிய ஜப்பான் வீரர் நிஷிகோரிக்கும் பிரதமர் மோடி தனது…

Read More

சவூதிக்கு அச்சம் – 900 மீற்றருக்கு அடுக்கு வேலி!

ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக சவ+தி அரேபியா ஈராக்குடனான தனது 900 கிலோமீற்றர் பரந்த பாலைவன எல்லைப்பகுதியில் பல அடுக்கு வேலியை அமைக்க தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக சவு+தியின் ஈராக்-குவைட் எல்லைக்கருகில் இருக்கும் ஹபர் அல் பதீனில் இருந்து ஜோர்தானுக்கு அருகாமையில் இருக்கும் வடகிழக்கு நகரான துரைப் வரையான பகுதிக்கு வேலியை பலப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. இதில் ஐந்து அடுக்கு வேலியுடன் இரவுப் பார்வை கொண்ட கெமராக்கள், 50 ராடார்கள் மற்றும் கண்காணிப்பு கொபுரங்களும்; அமைக்கப்படவுள்ளன….

Read More

அரபு நாடுகளின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாம் – ISIS; ஒழித்துக்கட்ட முஸ்லிம் நாடுகள் தீர்மானம்

ஐ.எஸ். கள் பிடியில் இருக்கும் பகுதிகள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்திவரும் நிலையில், அரபு நாடுகளின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ். களின், அரசியல் ரீதியாகவும், ராணுவத்தைக் கொண்டும் அடக்க அனைத்து அரபு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக அரபு நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் நபில் அல்-அரபி அறிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகளின் மாநாட்டுக்கு பின்னர்…

Read More

ஹமாஸுக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை

ஐக்கிய அரசு தொடர வேண்டு மானால் ஹமாஸ் அமைப்பு காசாவில் தனது செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவை ஆளும் 27 பிரதி அமைச்சர்கள் கொண்ட நிழல் அரசு குறித்து அதிருப்தி வெளியிட்ட அப்பாஸ் அங்கு ஒரு அரசுதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இஸ்ரேல் முன்னெடுத்த 50 நாள் தாக்குதலில் இருந்து காசா மீண்டு வருகிறது. இந்த மோதலில் 2,100க்கும் அதிகமான பலஸ்தீனர் கொல்லப் பட்டதோடு…

Read More

ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்தவும், ரணிலை ஜனாதிபதியாக்கவும் பாடுபடுவேன் – சஜித் பிரேமதாச

எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஐ.தே.கட்சியை ஆட்சி பீடமேற்றுவதற்காக அனைத்து விதமான தியாகங்களையும் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு நாட்டில் ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுவேன். அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காக எனது முழு பலத்தையும் வழங்குவேன் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

Read More

ஒரு வாய்ப்புக் கிடைத்தால் இஸ்ரேலை விட்டு வெளியேறிவிடுவோம் – 30 சதவீத யூதர்கள் தெரிவிப்பு

இஸ்ரேல் காஸாவின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற விரும்பும் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.இஸ்ரேல் தொலைக்காட்சி அலைவரிசையான சானல்-2 நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. ஒரு வாய்ப்புக் கிடைத்தால் இஸ்ரேலை விட்டு வெளியேறிவிடுவோம் என்று 30 சதவீத யூதர்களும் தெரிவித்துள்ளனர்.14 சதவீதம் பேருக்கு என்னச் செய்யவேண்டும் என்பது தெரியவில்லை. 56 சதவீதம் பேர் இஸ்ரேலை விட்டு வெளியேறமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இஸ்ரேலை விட்டு வெளியேறி லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய…

Read More

இளவரசர் சயீட் ஹுசைன், மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்றுக்கொள்வாரா..?

இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா புதிய மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ஹுசைனுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு பெற்றதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த அழைப்பு தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சமுத்திர பிராந்திய ரீதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் புதிய உறவுகளை வலுப்படுத்தி இரு தரப்புகளை மேன்படுத்த எண்ணியுள்ளதாக ஜப்பான் தரப்பில்…

Read More

மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – இலங்கை

சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அலகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ்…

Read More

புதிய ஐநா மனித ஆணையாளருடன் கலந்துரையாட இலங்கை தயார்: கெஹெலிய

ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக வந்துள்ள இளவரசர் ஸெய்த் அல் ஹுசைனுடன் இலங்கை விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என புதிய ஆணையாளர் தெரிவித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்தி பற்றி கருத்து கேட்கையில் அமைச்சர் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். ஐநாவின் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதை…

Read More

ஜப்பானுக்கு WHO எச்சரிக்கை

ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 70 வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் நுளம்பினால் பரவும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெங்குக் காய்ச்சல் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஏனைய வியாதிகள் டோக்கியோவில் தலை தூக்கி வருவதாக உலக சுகாதாரத் தாபனமான WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. டோக்கியோவில் கடந்த வாரம் குறைந்தது 55 பொது மக்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருப்பதாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோயாளிகள் அனைவருக்கும் ஓர் பொது…

Read More

பிரேசில் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து

பிரேசில் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செப்டம்பர் 7, 1822ல் போர்ச்சுக்கல்  இடமிருந்து பிரேசில் தனது சுதந்திரத்தை பெற்றது, பிரேசில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக உயிரினை தியாகம் செய்த போராளிகளை தான் இந்த தினத்தில் நினைவு கூறுவதாகவும் மேலும் பிரேசில் நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்த நாம் கடமைப் பட்டுள்ளோம். உலக நாடுகளில் இந்தியாவுக்கான ஒரு முக்கிய நட்பு நாடு பிரேசில் இரு நாடுகளுக்கு இடையேயான…

Read More