ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டே பணியாற்ற வேண்டியிருக்கின்றது. மன்னார், கூழாங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்
சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை தொடரவேண்டியிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஐ.நா ஹெபிடட் நிறுவனத்தின் ஊடாக மன்னார் கூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் அரபாத்…
