Headlines

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக அமீர் அலி நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். 08 ஆம் திகதி மாலை பிரதி அமைச்சா் அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமித்துள்ளார்.

Read More

பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடம் கடந்த 20 தினங்களுக்கு மேல் இயங்காத நிலையில் இருப்பதாகவும் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிருக வைத்திய பிரிவு மாணவர்கள் ‘தெய்யொத் தன்னனே’ (கடவுளுக்கும் தெரியாது) என்ற நாடகத்தை பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி திறந்த வெளிநாடக அரங்கில் அரங்கேற்றியதும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாகவும் ஏற்பட்ட சர்ச்சையே இவ்வாறு மிருக வைத்திய பீடம் ஸ்தம்பிதம்அடையக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….

Read More

முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (23) 90 ஏக்கர், அல் ஹஸ்பான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் கட்சியின் முதளைப்பாளி அமைப்பாளர் தௌபீக்,…

Read More

மைத்திரியின் வெற்றிக்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் – றிஷாத் பதியுதீன்

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன், அஷ்ரப்கான், ஹாசிப் யாஸீன்- தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிக்கு எதிராக, தாங்கள் இந்த அரசு மேல் கொண்ட அதிருப்தியினால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புவாய்ந்த அமைச்சுப்பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் எல்லாவைரையும் விட ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்சவின் உண்மையான நட்பு இவையெல்லாவற்றையும் துறந்து தாங்கள் வெளியேறி வந்ததை அங்கீகரிப்பது போல் பெரும் திரளான மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருப்பதை தான் பெரிதும் மதிப்பதாகவும் பெரும்…

Read More

கடும் வெப்பம்; பலர் நோயால் அவதி

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, மலை­ய­கத் தின் நீர்த்­தேக்­கங்கள் பல­வற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. கொத்­மலை நீர்த்­தேக்­கத்தில் 25 சதவீதம் வரை நீர்­மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­து டன், விக்­டோ­ரியா நீர்த்­தேக்­கத்­தின் நீர்­மட்டம் தற்­போது 50 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் இலங்கை மகா­வலி அதி­கா­ர­சபை குறிப்­பிட்­டுள்­ளது. காசல்றீ, மவு­சா­கலை மற்றும்…

Read More

பிரதியமைச்சரானார் பாலித்த தேவரப்பெரும

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெருமவும்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக, மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Read More

வரலாற்று முக்கியத்துவான இன்னாலை எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது

இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மூடி இன்று தலைமன்னார்வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு தலைவருமான றிஷாத் பதியுதீன் தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்தில் நிற்கும் காட்சி.

Read More

திருமறை குர்ஆனை நேசிக்கும் அமெரிக்காவின் திரைபட நட்சத்திம் லென்ஸி லோஹான்!

இதோ நாம் வெளியிட்டுள்ள படம் அரபி சமூக வலைதளங்களில் அமோக வரவேர்ப்பை பெற்ற ஒரு படமாகும் அவரது பெயர் லென்ஸி லோஹான் அமெரிக்க திரை பட நட்சத்திரம் அவர் கையில் வைத்திருப்பது திருமறை குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருமறை அல்குர்ஆன் போதையில்லாத ஒரு வாழ்வை முஸ்லிம்களுக்கு அமைத்து தந்திருக்கிறது அது போன்ற ஒரு வாழ்வு எனக்கும் கிடைத்திட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார் அவர் இஸ்லாத்தை நோக்கி…

Read More

இனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி – தயான் ஜயதிலக

அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவவில்லை என்பது உண்மை. எனினும்,  2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. தார்மீக ரீதியாக அரசாங்கம் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச…

Read More

அரசியலில் குதிக்கிறார் ரஜினி?

சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற பரபரப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாஜக தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தையடுத்து பாஜகவில்…

Read More

தொழிற்சாலையை விட்டு தப்பி சென்ற அதிகாரிகள் : 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

(K.Kapila) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

VAT நடைமுறைப்படுத்தப்படும் – நிதியமைச்சு

திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வீதமாக திருத்தம் செய்யப்பட்ட வற்வரியே எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More