Headlines

முஸ்லிம் கட்சிகள், சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி. தலைவர்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சகல தரப்பினரும் உள்ளனர் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு சரியான சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்குள் இருப்பவர்களும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தவேளையில் அனைவரும் இணைந்து பலமான எதிரணியை உருவாக்க வேண்டும். இதற்கு அடித்தளம் இடப்படுமாயின் தமது ஆதரவை வழங்க தயார் எனவும் அநுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அரசாங்கத்துடன், இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளும் தற்போது சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை…

Read More

ஜனாதிபதி தேர்தலில் சோபித தேரர் போட்டியிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்வார்

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவினை பெற்று பொது வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாதுலுவே சோபித தேரர் முயற்சிக்கின்றார். எனினும், இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சோபித தேரர் சிக்கலில் மாட்டிக்கொள்வார். தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. சோபித தேரருக்கு அரசியல் அனுபவம் கிடையாது எனவே வேறும்…

Read More

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கழுதைகளின் பெயர் நெப்போலியன் மற்றும் அனடோசியா என்பதாகும். இருவரும் இப்போது மீண்டும் தங்களது காதலைத் தொடர்கின்றனர். இரு கழுதைகளும் காதலில் மூழ்கித் திளைத்ததாக கூறி சமீபத்தில் இதைப் பிரித்து விட்டனர். இரு கழுதைகளும் கிட்டத்தட்ட 10 வருடமாக ஒன்றாக சுற்றித் திரிந்த காதல் பறவைகளாகும். ஆனால் இந்த விலங்கியல் பூங்காவுக்கு வந்த…

Read More

உரிய ஆவணங்கள் இருப்பின் ஒருவாரத்தில் ஊழியர் சேமலாப நிதி

உரிய ஆவணங்களைச் சமர்பிக்கும் பட்சத்தில் ஒரு வார காலத்தினுள் ஊழியர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலமைச்சர் காமினி லொக்குகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஒத்துவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர் சேமலாப நிதியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது உண்மையால் எதிர்க்கட்சி அது பற்றி “கோப்” குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேற்படி நிதி தொடர்பான நிர்வகிப்புகளை மத்திய வங்கியே மேற்கொள்கின்றதெனக் குறிப்பிட்ட அமைச்சர் பொய்க் குற்றச்சாட்டுக்களை…

Read More

சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கு 50 லட்சம் வாக்குகள் திரட்டிக்கொடுக்கப்படும்

சிங்கள பௌத்த உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஐம்பது லட்சம் வாக்குகள் திரட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதிலும் உள்ள 5000 விஹாரைகளைத் தெரிந்து அதன் ஊடாக பிரச்சாரம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில்…

Read More

அரபு நாடுகளின் ஆதவை இழந்துவரும் இலங்கை

சர்வதேசத்தில் இலங்கைக்கான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிரேஸ்ட ராஜதந்திரியும் பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் ஆதரவளித்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் யதார்த்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச ரீதியான விசாரணை நடாத்துவது அவசியமற்றது எனவும், தேவையற்ற தலையீடு எனவும் தெரிவித்து 22 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணைப்…

Read More

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு – வெனுஜா நிம்சத் 199 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம்

ஐந்தம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று (28) வெளியாகியுள்ள நிலையில் எம்பிலிபிட்டிய முன்பள்ளி மாணவி டபில்யூ.ஏ.வெனுஜா நிம்சத் 199 மதிப்பெண்களை பெற்று தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) வெளியாகியுள்ளன. கிராமப்புர பாடசாலைகளுக்கான முடிவுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் www.doenets.lk எனும் இணையத்தள முகவரியினூடாக பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பிலுள்ள…

Read More

ஜனாதிபதி இல்லாதபோது, சர்வதேச தீவிரவாதியை நாட்டுக்குள் அழைத்தமை சந்தேகத்திற்குரியது

சர்வதேச ரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின் விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஷா வழங்கியமை தேசத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் கடுமையாக சாடினார். மியன்மாரில் இயங்கி வரும் கடும் போக்கு அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரரிர் பொதுபலசேனா அமைப்பி;ன் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருக்கின்றமையானது இந்த நாட்டின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாகம் எனவும்…

Read More

கொழும்பில் பொதுபல சேனா மாநாடு – வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறை

இன்று பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்வுள்மையை தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 27-09-2014  மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேரத்தினை சரியாக தெர்ந்தெடுத்து வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறையாக நாங்கள்…

Read More

இங்கிலாந்து ஒப்புதல்: ISIS மீது விமான தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அங்குள்ள எண்ணெய் கிணறு களையும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சியாளர்கள் கூட்டத்திலும்…

Read More

அல்காயிதா வீடியோவை வெளியிட்ட இஸ்ரேலிய உளவுப் பிரிவு…!

அல்காயிதா, இந்தியாவில் கிளையை துவக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோவை  வெளியிட்டுள்ள இணையதளம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாதால் நிர்வகிக்கப்படும் நுண்ணறிவு பிரிவாகும்.ஸெர்ச் ஃபார் இண்டர்நேசனல் டெரரிஸ்ட் எண்டிடீஸ் என்பதன் சுருக்கமே ஸைட் ஆகும்.இந்த இணையதளத்தின் தலைவரான ரீத்தா காட்ஸும், ஜோஷ் ஸெவனும் 2002-ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் துவக்கிய ஒரு உளவு அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.அதற்கு முன்பு காட்ஸ், இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பணம் வாங்கிக்கொண்டு ‘ரகசிய தகவல்களை’ அளிப்பதற்காக இருவரும் இணைந்து 2008-ஆம் ஆண்டு இணையதளத்தை துவக்கினர்….

Read More

BREAKING NEWS சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு. முதல்வர் பதவியை இழந்தார் ஜெ: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் ‘தி இந்து’விடன்…

Read More