Headlines

முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியை சஸ்பெண்டு

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான் (12). சம்பவத்தன்று வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘ என்ற சினிமா படம் காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பரீட்சை நடத்தப்பட்டது. அதன் பின்னர் படத்தில் வந்த காமெடி காட்சிகளை நினைவுபடுத்தி மாணவன் வாலீத் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்றார்….

Read More

கல்பிட்டி கடற்கரை பிரதேசத்தில் தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்த பட்ட ரூபா 300,000.00 நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி கடற்கரை பிரதேசத்தில் தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது இன் நிகழ்வு A.R.M. முசம்மில் தலைமையில் நடைபெற்றது

Read More

மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரினால் கீலியன் குடியிருப்பு கிராமத்தின் உள்ளக வீதிக்கான நிதியொதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களினால், நடப்பாண்டுக்கான நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான கீலியன் குடியிருப்பு கிராமத்தின், உள்ளக வீதிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 750 மீற்றர் தூரத்திற்கு தார் வீதி போடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுறும் நிலையில், தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிஹால் ஆகியோர் பாதையை பார்வையிட்டனர். (ன)  

Read More

இசுறுபாயவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யத்தடை

வைத்தியர்களின் பிள்ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம்: இலண்டனில் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இலண்டனில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “வறுமையை ஒழித்து சுபீட்சம் மிகு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை களையப்படும். பயம்,…

Read More

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Rishad Bathiudeen Foundation அனுசரணையில் கிண்ணியா மத்திய கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் மற்றும் இளைஞர் விவகார அமைப்பாளர் Dr. ஹில்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அப்துல்லாஹ் மஹ்ரூப் MP உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Read More

எலுமிச்சையின் விலை அதிகரிப்பு!

எலுமிச்சையின் பற்றாகுறை காரணமாக தற்போது சந்தைகளில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 700 ரூபாய் தொடக்கம் 750 ரூபாய் இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, ஒரு எலுமிச்சையின் விலை 20 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Read More

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான் வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளித்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றைய தினம் (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவற்றை கையளித்தார். இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 20 ஆயிரம் பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 2352 பேர் தொலைந்து போன நகைகளையும் மீளப் பெற்றுக்…

Read More

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பிரதியமைச்சர்

திருகோணமலை – குச்சவெளி, இக்பால் நகருக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது கிராம சேவகர் கட்டடத்தில் மக்களுடனான சந்திப்பினை ஏற்பாடு செய்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார். குறித்த நபர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த திட்டத்துக்கான தகுந்த ஆவணங்களை ஒப்படைக்குமாறும் இதன் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நிலாவெளி கோபாலபுரம் பள்ளியில் அமைச்சர் தலைமையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. கிராம மக்கள் எதிர்நோக்கும்…

Read More

‘சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்’ : சரத் பொன்சேகா

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு…

Read More

வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர்!

கொழும்பு மேல்மாகாண நுண்வரைகலை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதான மன்றத்தின் (ஜாதிக சமகி சங்கமய) வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வானது இலங்கை குடியரசு தினம் (மே 22), சர்வதேச உயிரியல் பல்வகைமை தினம் (மே 21), உலக கலாச்சார தினம் (மே, 22) ஆகிய தினங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரன்பண்டா ஜெயவர்தன, வரவேற்றார். இதேவேளை,…

Read More

கபீர் ஹாஷிம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம், தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) அழைப்பாணை விடுத்தது. அது , அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும். குறித்த மனு மீதான விசாரணை மீண்டும்…

Read More