Headlines

புத்தளத்திலுள்ள 08 பாடசாலைகளுக்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – நவவி

புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான M.H.M.நவவி அவர்கள் தெரிவித்துள்ளார். “புத்தளம் தொகுதிக்குள் 39 பாடசாலைகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை . இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதல்கட்டமாக எட்டு கட்டட்டங்களுக்கே மேற்கூறப்பட்ட நிதியான 120 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் வகையில் அதற்கான எட்டு நிலையங்களை ஆரம்பிக்கவும்…

Read More

எமக்கு பாடம் கற்பிக்க முஸ்லிம்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தனர் -டளஸ்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதனை தவிர 10 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாகவும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் இந்த வாக்குகள் மூலம் பெற்றி பெறவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எம்மை பழிவாங்கும்…

Read More

மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் எம். முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீனினால் அண்மையில் வழங்கப்பட்டது. சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகமான அன்வர் எம் முஸ்தபா, தென் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னாள் உறுப்பினராவார்.

Read More

நியூயோர்க்கில் மஹிந்த, ஒபாமா தம்பதிகள்!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் மிஷேல் ஒபாமா வழங்கிய வரவேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒபாமாவும் நியூயோர்க் சென்றுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சகிதம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது பாரியாருடன் எடுத்துக்கொண்ட உத்தியோகபூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

சாரதிகளுக்கு ஓர் எச்சரிக்கை.!

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சாரதிகளுக்கு புள்ளியிடும் நடைமுறை இந்த வருடம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளியிடும் நடவடிக்கைக்கு ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடைமுறை சிக்கல்களை சரி செய்துக் கொண்டு இந்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். புள்ளியிடும் நடைமுறையின் ஊடாக சாரதிகளினால் இழைக்கப்படுகின்ற தவறுகளுக்கு புள்ளிகள் இடப்படுவதுடன், அந்த புள்ளி…

Read More

பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மான

பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் பாதிக்கப்படுவதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

Read More

எம்.பி. பதவியைத் துறக்கத் தயார் – பாலித

நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கெட்ட…

Read More

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், ஸ்ரீதரன்.வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் தனபாலசுந்தரம், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்­டிய எத்­த­னையோ விட­யங்­களைப் பெறாமல் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவும், சமூக விடு­த­லை­யினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் எமது கட்சி இம்­மா­வட்­டத்­திற்கு வந்­ததே தவிர யாருக்கும் தீங்கு விளை­விப்­ப­தற்­காக எமது கட்சி  இங்கு வர­வில்லை. நாம் சமூ­கத்தின் நல­னுக்­காக செயற்­ப­டு­வ­தால்தான்  இன்று எத்­த­னையோ இடங்­களில் எனக்­கெ­தி­ராக கொடும்­பா­விகள் எரிக்­கின்­றார்கள் என அகில இலங்கை…

Read More

அல்கொய்தா இந்தியாவுக்கு எதிரான மிரட்டல் அல்ல

அல்கொய்தா இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்குவதாக அறிவித்து இருப்பது பற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் கெய்டன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறுகையில், இது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை- என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘அல்கொய்தாவின் இந்த புதிய அறிவிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. இது தொடர்பான தகவல்களை கவனித்து வருகிறோம். இது இயக்கங்களிடையேயான போட்டியாக கருதுகிறோம். மேலும் அமெரிக்கர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் கருத…

Read More

20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் அடுத்த வாரத்தில்!

இருபதாம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – 20 ஆம் திருத்தச்சட்டத்தை முன்வைப்பது தொடர்பில் எமக்கு 15 ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பாராளுமன்றத்திலுள்ள…

Read More

வடமேல், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று (17) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமேல் மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மண்சரிவின் பாதிப்பு அதிகமாகவுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே கொழும்பு மாவட்டத்திலும்…

Read More