Headlines

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில்…

Read More

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்தும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்

அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும்…

Read More

வெளிநாடு செல்ல திறைசேரியின் அனுமதியை பெற வேண்டும்

-ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு – கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது, திறைச்சேரியில் அனுமதி பெற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். குறித்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் அண்மையில் ரஷ்யாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தனர். இதற்காக கோடிக்கணக்கான நிதி விரயம் செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் குறித்த பயணம் ஜனாதிபதியினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே திறைசேரியின் அனுமதிக்கான உத்தரவையும் ஜனாதிபதி…

Read More

இலங்கை வீரர்கள் பல பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் – தயாசிறி!

தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட இலங்கை வீரர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் .இந்தியாவில்  நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அங்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளச்  சென்ற இலங்கையின் விளையாட்டு வீர,வீராங்கனைகள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான பொறுப்பை இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்கவேண்டும் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய…

Read More

அரச வாகனங்களை பயன்படுத்த மாதம் 1 லட்சம் கட்டணம்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் குறித்த அமைச்சுக்கு மாதத்திற்கு ஒருலட்சம் ரூபா செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி செயலாளர்கள் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…

Read More

மடாட்டுகமையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடாட்டுகமையில் நேற்று 2018.09.20 புதிய லங்கா சதொச நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான ஏ.ஆர்.எம்.தாரிக்  மற்றும்…

Read More

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்” பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத்…

Read More

இந்திய – மியன்மர் எல்லையில் நிலநடுக்கம்! 6.8.ரிக்டர் பதிவு

இந்திய-மியன்மர் எல்லையை மையமாக கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால், மணிப்பூர்…

Read More

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

வாகன விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரக்கறி ஏற்றி வந்த லொறி ஒன்று வேகத்தைக் கட்டுப்பாடுத்த முடியாமலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விபத்து தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More