ஜனாதிபதி மஹிந்த – மு.கா. சந்திப்பு
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார். அந்தவகையில் கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்திய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி இன்று செவ்வாய்க்கிழமை ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான…
