Headlines

உயர் அடர்த்தி பொலித்தீன் தடை உற்பத்தியாளர்களின் சோகக்கதை

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறை பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இலங்கையின் உயர் அடர்த்தி (HDPE) பொலீத்தின் மற்றும் மீள்சுழற்சி கைத்தொழில் உள்ளவர்கள் இத்தடைக்கு எதிராக போர் முழக்கம் செய்துள்ளார்கள். இத் தடையினால் நாடு பூராகவும் உள்ள 345,000 பேர் தமது தொழில்களை இரவோடு இரவாக இழப்பர். அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சி சங்கத்தின் [ ACPMRA] தலைவர்…

Read More

செட்டிக்குள பிரதேச சபையின் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்வு

செட்டிக்குள பிரதேச சபையில் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை என்பவற்றை முறையே வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைப்பதையும். மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.

Read More

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; அமைச்சர் றிஷாட் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது மேன்முறையீட்டு நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இன்று (20) தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt   எனும் இலக்கத்திலான இந்த வழக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பத்மன்சூரசேன நீதிபதி அர்ஜூன ஒபபேயசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த…

Read More

“சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சமூகமான முடிவுகளுக்கு அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தெரிவித்தார். உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனதலைமையில் நேற்று (26) நடைபெற்ற சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கை தொடர்பிலான உயர்மட்டமாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ”அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இராஜாங்கஅமைச்சர் ஹரீஸ்,…

Read More

ஜனாதிபதி பங்கேற்கவில்லை

‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று  வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவினரே இதனை கையளித்துள்ளனர். இந்த வெளியீட்டு வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின்…

Read More

இலங்கையில் முதலீடு செய்ய முனைப்புடன் களத்தில் இஸ்ரேல்!

இலங்கையில் இஸ்ரேல் நட்புறவு மன்றம் நிறுவப்பட்டதை தொடர்ந்து… இலங்கையில் முதலீடு செய்வதில் இஸ்ரேல் முதலீட்டார்கள் கடும் முனைப்பு காட்டிவருவதை  அவதானிக்க முடிகிறது.மிக அண்மைக்காலத்தில் இலங்கை அமைச்சுகள் சிலவற்றுக்கு விஜயம் செய்தபோது அமைச்சின் அமைச்சர்கள் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக தகவல் வழங்கப்பட்டது.அண்மையில் தேசிய வன அமைச்சுக்குக்கு விஜயம் செய்த போது  யால மற்றும் வில்பத்து வனங்களில் கேபள் கார் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டாலர்களுடன் அமைச்சர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டது. இது…

Read More

குர்ஆனில் கண்களின் அதிசயம்!

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான். ‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள் அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம். ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது?…

Read More

“ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம்”. பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

நாட்டில் நிலையான ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தோமோ அது போல் கோட்டாவையும் இம் முறை நிராகரிப்போம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (29) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது புதிய ஜனநாயக முன்னனணியின் ஜனாதிபதி வேட்பாபர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றிய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More

எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, தன்னுடைய பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்தது. ஆனால் அவரால், இதில் பங்கேற்க முடியாமல் போனது, எனவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது….

Read More

றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு

– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…

Read More

அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்: ரணில் விக்ரமசிங்க

குரோதம் வன்முறைகளில்லாத புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் ஏற்படுத்த நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அனைத்துக்கட்சிகளினதும் ஒத்துழைப்பு இதில் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவை மக்களால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு பொலனறுவை நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்…

Read More