Headlines

“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெ ரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத்தூபியை இப்போது…

Read More

20,000 மன்னார் மக்கள் வாக்களிக்கச் செல்வதில் சிக்கல்: புத்தளம் அரசியல்வாதி கைவரிசை?

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களில் சுமார் 20,000 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்புக்குச் செல்வது புத்தளம் அரசியல்வாதியொருவரால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்களை அங்கிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளர் 20 பேரூந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததோடு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தரப்பு 200 பேரூந்துகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் எனினும், புத்தளம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அங்குள்ள சாரதிகளை அச்சுறுத்தி அவர்களின் பிரயாணத்தை தடுத்து வருவதாகவும் சட்டத்தரணி ருஸ்டி ஹபீப்…

Read More

குச்சவெளியில் அ.இ.ம.கா. ஏற்பாட்டில் இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

குச்சவெளி அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (11) கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, பாராளுமன்ற உறுப்பினர்களான் அப்துல்லாஹ் மஹ்ரூப் , இஷாக் ரஹ்மான் கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கலாநிதி ஜமீல் ஆகியோர் உட்பட…

Read More

மஹிந்தவின் தோல்விக்கு யார் காரணம்?

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை பஷில் ராஜ­பக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்­கித்­தள்­ளி­ய­தோடு தம்மை முதன்­மைப்­ப­டுத்­தினர். இறு­தியில் இதற்­கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது என்று கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளார்.

Read More

அடுத்த ஆண்டில் இருந்து முஸ்லிம்களுக்கு தனி ரேடியோ சேனல்: இங்கிலாந்து அரசு அனுமதி

இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நோக்கில் தனியாக வானொலி சேவை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மான்செஸ்ட்டர் நகரில் உள்ள ஏஷியன் சவுண்ட் ரேடியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. இங்கிலாந்து ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் இதற்கான லைசென்ஸ் அர்கிவா, பாவெர் மற்றும் யூடிவி மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் (2016) 14 வானொலி நிலையங்களின் மூலம் இந்த வானொலி நிகழ்ச்சிகள் இங்கிலாந்து முழுவதும் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சிகளில்…

Read More

மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா ஒளவையார் முதியோர் சங்க தலைவர் அருளானந்த ராஜா தலைமையில் நேற்று 29.01.2017 ஆம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

எனது மெய்ப் பாதுகாவலரிடம் இருந்தது துப்பாக்கி அல்ல.. அது தண்ணி போத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதியின் அருகில் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த இராணுவ கோப்ரல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும், எவ்வாறு நாமல் ராஜபக்ச மட்டும் இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் கோப்ரலை…

Read More

எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காது….

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி தேர்தலின் மூலம் கிடைத்த திருப்புமுனை குறித்து பேரதிர்ச்சி க்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேன, நாடு ஒரு குடும்பத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்க இனிமேலும் இடமளிக்கப்படாது என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார். “நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சிறிது காலம் கடந்துள்ள போதும் நான் தான் ஜனாதிபதி என்பதனை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”யென ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இறுதி நாள்

விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் நேதாஜியின் பயணம் பற்றிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை…

Read More

வவுனியா பொருளாதார மத்திய நிலையப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன்  இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்…

Read More

ஐ.எஸ் மீது, அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா தீர்மானம்

ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில், ‘ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள்…

Read More