Headlines

திருக்குர்ஆன் : “ஈ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்!

எஸ்.ஹலரத் அலி உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர்…

Read More

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன போக்கிலும் நடந்துகொள்வதாக, நமது சமூகத்தை நோக்கிய குற்றச்சாட்டுக்கள் தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிக் கிளைக்கு நேற்றுக் காலை (13/10/2016) விஜயம் செய்த அமைச்சர், ஜம்இய்யதுல்…

Read More

சமகால அரசியலும் முஸ்லிம்களும்..! – கவிஞர் கால்தீன்-

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள அதி பெரும்பான்மையான கட்சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் இலட்சியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதேபோன்று, சிறுபான்மைக் கட்சிகளின் நிலையும் பாரதூரமான ஒரு பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதி பெரும்பான்மை தேசிய கட்சிகளில் சேர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள், சிறுபான்மைச் சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குப் புறம்பான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளனர். இப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து, பெரும்பான்மையினரின் எண்ணங்களுக்கு சார்பாகவே நடந்து கொண்டனர். இது வரலாறாகும். அத்தகைய பிரதிநிதிகளால் சிறுபான்மை…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை!

கொஸ்கமை சாலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கொஸ்கம பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிப்புக்களை நேரடியாக கண்ணுற்றதன் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைவற்றையும் தீர்த்து திரும்பவும் இப்பிரதேசத்தினை சாதாரண பிரதேசமாக மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப் பிரதேசத்துக்கான நேரடி…

Read More

மஹிந்த ராஜபக்ஷ அநியாயம் செய்திருந்தால் நடவடிக்கை: ராஜித்த

யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை பின்பற்றியவர்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னால் சாட்சியளிக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, கட்டளையிடும் அதிகாரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட யாரோ அநியாயம் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். என்னுடைய அனுபவத்தின் பிரகாரம் யுத்தம் ஒரு குற்றமாகும். அதன் பிரகாரம் யுத்தத்துக்காக யாராவது ஒருவர் கட்டளையிட்டிருந்தால்…

Read More

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றும் ஹக்கீமின் யுக்தி.. நசீர் நியமனம் குறித்து அ.இ.ம.கா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸு க்கு கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் அலை காரணமாகவே, அட்டாளைச்சேனைக்கு எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை  மு.கா தலைவர்  ஹக்கீமுக்கு ஏற்பட்டது. இதற்காகவேண்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் அட்டாளைச்சேனை மக்கள் நன்றி கூறவேண்டுமென கட்சி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளுராட்சி தேர்தல் பிரசாரம் சூடுப்பிடித்து வரும் நிலையில் மு.கா.வின் கோட்டைகளில் அகில இலங்கை மக்கள்…

Read More

தூக்கிலிடப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி விடயத்தில் இஸ்லாத்தை குறை கூற இடமில்லை..!!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் தூக்கிலிடப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி விடயத்தில் இஸ்லாத்தை குறை கூற இடமில்லை..!! இஸ்லாத்தை விமர்சிக்க எங்கே?சிறந்த தருணம் அமையப் போகிறது என ஏங்கி ஒப்பாரி வைத்து அலைந்து திருந்தோருக்குக் ஈரான் நாட்டில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹென்னா ஜாப்ரி விடயம் மிகப் பெரிய பேசு பொருளாய் உருவெடுத்துள்ளது. முதலில் ஒரு பெண் தன்னை கற்பழிக்க வருபவனை இஸ்லாமிய அடிப்படையில் தாக்கலாமா?எனப் பார்ப்போம். மேலும்,அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள…

Read More

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிடியில் அமைச்சர் ரிஷாத் திறந்துவைப்பு

நோலெட்ஜ் மோகன்டைசிங்   நிறுவனத்தின் மற்றும் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிட்டியில் இருக்கும் யுனிட்டி பிளாசாவில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான  ரிஷாத்   பதியுதீனினால்    அவர்களினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி பிரதி அமைச்சருமான  மையோன் முஸ்தபா அவ‌ர்க‌ளி‌ன் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின்…

Read More

முஸ்லிம்களின் போராட்டங்கள் இஸ்லாமிய வரையறைக்குள் அமைய வேண்டும்! சுபைர்டீன் ஹாஜியார் வலியுறுத்து

உலமாக்கள், இஸ்லாமிய சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமேயொழிய, எழுந்தமானதாகவோ, சர்வதேச நியமங்களுக்கு இயைந்தவாறோ எவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதென்று மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யக் கூடாதென ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை, தனிப்பட்ட முறையிலே தான் வரவேற்கின்றபோதும், எந்தவொரு ஆர்ப்பாட்டமும், கவனயீர்ப்புப் போராட்டமும் இஸ்லாமிய வரையறைக்குள், எவரையும் புண்படுத்தாது அமைய வேண்டுமெனவும்…

Read More