Headlines

அரசியல்வாதியாக வர வேண்டும் – மலாலா

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, மிக இளம்வயதில் நோபல் பரிசைப் பெறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்யார்த்தியின் பணிகள் எனக்கு தூண்டுகோலாக இருந்தன. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். நான் நோபல் பரிசை பெறும்போது இந்திய…

Read More

தகவல் அறியும் சட்டமூலம் இம் மாதம் சமர்ப்பிப்பு

தகவல் அறியும்  சட்ட மூலம்  இந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறியும் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த  சட்டமூலம்  பூர்த்தியாக்கப்பட்டு, மாகாணசபைகளிடம் கருத்து கோரப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,குறித்த சட்டமூலம்  அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், விவாதம் பற்றிய…

Read More

ஜப்பான் மீதான ஈடுபாட்டை ஐ.தே.க வரவேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த கருத்தை சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பொருளாதார நிபுணராக விளங்கும் ஹர்ச டி சில்வா, ஜப்பானின் இலங்கைக்கான முதலீடுகள் யாவும் சிறப்பான பயன்களை தருபவையாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். இலங்கை சீனாவிடம் பெற்ற கடன்களுக்காக 6.5 வீத வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் ஜப்பானின் முதலீடுகளை பொறுத்தவரையில், அது இலங்கைக்கு நிதியுதவியின் அடிப்படையிலேயே முதலீடுகளை மேற்கொள்வதாக ஹர்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு…

Read More

அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறையவில்லையா?

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு கூறியது. எனினும், இதுவரை வரவு செலவுத் திட்ட சலுகை நுகர்வோரைச் சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு…

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்

முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சவுத்பார் கிராமத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் கலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் வீதி திறப்புவிழா…

Read More

மங்கள உடனடியாக பதவி விலக வேண்டும்: வாசுதேவ

– லியோ நிரோஷ தர்ஷன் – நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, மேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவிவிலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

வீட்டிலிருந்து நகை பணம் திருட்டு

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகல்லாறு முதலாம் குறிச்சியில் வீடொன்றிலிருந்து (08) நேற்று 10 பவுண் நகைகளும், பத்தாயிரம் ரூபா ரொக்கமும் திருடப்பட்டுள்ளதான முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுப்பிரமணியம் சுகந்தி என்பவரின் வீட்டில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. அடுக்களைப் பக்கத்தினூடாக வீட்டிற்குள் பிரவேசித்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளதாக சுகந்தி தெரிவித்தார். தாம் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தூக்கத்திலிருந்து வழமைபோன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தவுடன் மேற்படி திருட்டு…

Read More

25 வருடங்களுக்குப் பின் வழங்கப்பட்ட பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம்

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம் 25 வருடங்களுக்குப்பின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்  நேற்று பள்ளிவாசல் தலைவரிடம் கையளிக்கப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் முஹமட் ஜவாஹிரீடம் அமைச்சர் விமல் வீரவன்சவினால் உறுதிப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, கெழும்பு மாநகர சபை உறுப்பிணர் முஹம்மட் முசம்மில் ஆகியோறும் கலந்த கொண்டனர். நேற்று இவ் வீடமைப்புத்திட்டம் 32 வருடங்களின் பின் 13.5…

Read More

காஷ்மீர் உயர்நீதிமன்றம் ராணுவத்திற்கு எச்சரிக்கை !

– அபூஷேக் முஹம்மத்- காஷ்மீர் உயர் நீதிமன்றம் CRPF மற்றும் ராணுவத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி பவுல் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஹுசைன் அக்தர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரிக்கின்றது . ஏன் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் முட்டிக்கு மேல் மற்றும் கண் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர் ? அவர்கள் நமது குடிமக்கள் ஆவர் .பெல்லட்களால் சுடுவதற்கு வானத்தில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் அல்ல .அவர்களை…

Read More

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு!

நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய…

Read More

எங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்

இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் ராம்குமார் இறந்தார் என்பது பொய். சிறையிலேயே இறந்துவிட்டார் என்று நம்மிடம் பகீர் வாக்குமூலம் கொடுக்கிறார் புழல் சிறைக் கைதி ஒருவர். சுவாதி கொலையின் போது கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் புழல் சிறை நிரம்பி வழிந்தது. ராம்குமாரால்…

Read More