Headlines

சிறுவனை விற்க முயன்றோர் கைது

எட்டு வயதுடைய சிறுவனை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவனின் சிறிய தந்தை உட்பட மூன்றுபேரை கட்டுகஸ் தோட்டை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அம்ப தென்னை கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரும் அவருடைய சகோதரர் மற்றும் சகோதரியுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவன், நான்கு பிள்ளைகள்…

Read More

ஓகஸ்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளமையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஓகஸ்ட் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படலாம் என, தெரிவிக்கப்படுகிறது.

Read More

வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேச அருகதை இல்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும்,மதவாதத்தையும் பேசுவதாகவும்,ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடக்கு மக்கள் வசந்தத்தை அனுபவிக்க வேண்டுமெனில் எமது அணியுடன் அணி திரவள்வதே  தான் இன்றைய தேவையென்றும் கூறினார். மன்னார் தாராபுரத்தில் இன்று மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார். மேலும் அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது – இன்று…

Read More

‘அம்பாறை வன்முறை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- அம்பாறை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாயல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று 65வது பிறந்த தினம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் குடியேற்றத்திட்டத்தின் ஊடாக அவரது குடும்பத்துக்குக் காணித்துண்டொன்று கிடைத்த நிலையில், சிறு வயதிலேயே பொலன்னறுவைக்கு இடம்பெயர்ந்திருந்தார். சிறு வயதில் கம்யூனிச சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன தனது 17வது வயதில் சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து…

Read More

இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது!

துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக  அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும்   துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வருகின்றனர். துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுக்குழு முயற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்குமிடையிhன கூட்டுடமையின் ஒரு சின்னமாக இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி, நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும்  சுபீட்சம்  ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதி செய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் மற்றும்சட்டத்தின் ஆட்சியினை வலுப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்ற நேரத்தில் இலங்கை துருக்கி –  கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்றமை முக்கியதுவமானது. தவிர்க்க முடியாத பல்வேறு காரணமாக 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவினை கூட்ட முடியவில்லை. இதனால் இருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம்  மற்றும் சர்வதேச தளம் மீதான வலுவான இருதரப்புஒருங்கிணைப்புக்கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலும் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட்ட பின்னர்குறிப்பாக இலங்கை மற்றும் துருக்கி இடையே உறவுகள் முறையே தழைத்தோங்கின. 2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கையிடையிலாக  இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தையில் இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும்வர்த்தகம் மீதான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இன்று, இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆர்வமாக உள்ளதுடன் துருக்கி போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அதன்பொருளாதாரத்தை விருத்திசெய்ய  விரும்புகிறது.; நம் நாட்டு மக்களின்  அபிலாஷைகளுக்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் முதல் முறையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒருமித்து, ஒரு சம்மதத்துடன் பொதுவானவிடயங்கள்  மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது…

Read More

அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவர் சந்திப்பு

செய்திப் பிரிவு இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதி தேர்தலுக்குப்பிறகு நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம் அதிகமான வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீடுசெய்வதற்கான ஆர்வம் மற்றும் 100 வேலைத்திட்டமும் அதன் அடைவுகள்,போன்ற முக்கிய விடயங்களை தூதுவருக்கு விளக்கினார். எஸ்டோனியா முதலீட்டார்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும், தொடர்ந்து இலங்கையுடன் உறவைப்பேணுவதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரித்தார். இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் கலந்துக் கொண்டார்.

Read More

வாயில் கலிமாவுடன், உயிரைநீத்த மத்ரஸா மாணவர் – அக்குறணையில் சம்பவம் (படங்கள்)

Ash-Sheikh TM Mufaris Rashadi- நேற்று முன்தினம் (16) வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர் சகோ உமர் பின் அமீன் அவர்களின் ஜனாஸா தொழுகையின் போது அலை மோதிய மனித வெள்ளமே இது. நல்லவர்களின் மரணம் கூட பிறரை நல்லவர்களாக்கத் தூண்டுகிறது. அவர்கள் மரணிப்பதில்லை, வாழ ஆரம்பிக்கிறார்கள்… நேற்றைய எனது பயணத்தில் அக்குரணையை எட்டிப் பார்த்து  பள்ளியில் இஜ்திமாவா ? என்றேன்.. இல்லை. ஷேக் அவரது ஜனாஸாவிற்கு…

Read More

அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!

இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார். பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன்…

Read More

வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பேதங்களை மறந்து செயற்படவேண்டும்

ரஸீன் ரஸ்மின் மன்னர் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. யுhழ் புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் முழுதும் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் பேசப்பட்டது. இதனால் வில்பத்து விவகாரத்திற்கு ஒருவார காலம் ஓய்வு கொடுக்கப்பட்டது. எனினும் வித்தியா தொடர்பில் நாட்டில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டதும் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு நினைத்தபடி ஆடிக்கொண்டிருக்கின்ற இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களை அடக்கி ஒடிக்கி வைத்துக்கொண்டு தாம் நினைத்தபடி…

Read More

வெள்ளைவேன் தான் வந்தது:வெலே சுதா வாக்குமூலம்

துமிந்த சில்வா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாவை கேட்டார். அந்த பணத்தை கொடுத்தேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸமே எந்தநேரமும் வந்தது என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்தார். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே…

Read More

ACMCயின் நன்றி நவிலும் நிகழ்வுகளும், மக்கள் பிரதிநிதிகளின் அனுபவப் பகிர்வும்

– அபூ அஸ்ஜத் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை மையப்படுத்தியே தமது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒக்டோபர் மாதமளவில் கட்சியின் செயற்பாடுகள் விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளான சூறாவளி சுற்றுப் பயணத்தின் போது மாவடிப்பள்ளியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்…

Read More