Headlines

அரச அதிகாரிகள், காணி பெற முடியுமென்றால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றார்கள்.? – ரிப்கான் பதியுதீன் ஆவேசம் 

” நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார். 25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாரும் அந்தக் காணிகள் அரச காணிகள் என அதிகாரிகளால் கூறப்படுவது தொடர்பிலும்,  எழுந்துள்ள பிரச்சினையை அடுத்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கான…

Read More

“நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது. அக்கட்சியின் தலைமை சமூகம் சார்ந்த போராட்டங்களையும், பணிகளையும் எந்தவித தடைகளுமின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேசத்திற்கான மகளிர் அணி காரியாலயத் திறப்பு விழாவும், கட்சியின் வெற்றிக்கு பாங்காற்றிய ஆதரவாளர்களுக்கு…

Read More

யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதாவுல்லாவின் கோட்டையில் ரணில் விக்கிரமசிங்க – கூட்டம் நிரம்பி வழிந்தது (படங்கள் இணைப்பு)

எம்.ஏ.றமீஸ் யுத்தத்தின் பின்னர் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக இன மத வாதங்களைத் தூண்டி மீண்டும் ஒரு யுத்தத்தைத் தோற்றுவிக்க மஹிந்த ராஜபக்ஷ முற்படுகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தின்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் வாழும் அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்க மைத்திரிபால…

Read More

அவுஸ்திரேலிய கொலை சூத்திரதாரி, உடலை புதைக்க யாருமில்லை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை, 16 மணி நேரம் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஹரோன் மோனிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய, அந்நாட்டின் எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் முன்வரவில்லை. அவன் உடலை, கடலில் அமிழ்த்துங்கள் என, மதகுருமார்கள் கூறியுள்ளனர். கடந்த 15ல், சிட்னி ஓட்டல் முற்றுகையின் போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, உடல் இன்னமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை; உடலை கேட்டு, இது வரை யாரும் அரசை அணுகவில்லை. இந்நிலையில்,…

Read More

நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள்

– ஜவ்பர்கான் – எந்தவொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சுகலந்த, இராசாயன பசளையுடன் தயாரிக்கப்பட்ட நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள். இதனால் பலர் நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார். காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்ட வயல் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி விவசாய போதனாசிரியை குந்தகை ரவிசங்கரின்…

Read More

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றபோது…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,  துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று (14)  அமைச்சில் தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எச் எம் பௌசி, ஐ எம் இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

வெள்ளப்பெருக்கு ; காத்தான்குடி பள்ளிவாயல்கள் விடுத்துள்ள அறிவித்தல்

-பழுலுல்லாஹ் பர்ஹான் – தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம். 2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது. அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி…

Read More

வடக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையுடன் சம்பளம்; அமைச்சர் றிஷாத்தின் கோரிக்கையை ஏற்றார் சத்தியலிங்கம்!

வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வடமாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு, அந்த மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார உதவிப் பணியாளர்களின் சம்பளத்தையும், நிறுத்தப்பட்டிருந்த மூன்று மாத நிலுவையையும் உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் பணித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தை 24/10/2016 அன்று சந்தித்து, மூன்று மாதகாலம் இந்தப் பணியாளர்களின் சம்பளம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனால், அவர்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்து, சம்பளத்தை நிலுவையுடன் வழங்குவதற்கு உரிய…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் முயற்சியால் சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்!

  அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின்போது சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா முன்வைத்த கோரிக்கை ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு, 50 வீடுகளை அமைத்துக்கொடுக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரிய, அமைச்சரின் கடிதத்தை கையளிக்கும் நிகழ்வு 2017-06-26 ஆம் திகதி பெருநாள் தொழுகையைத்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனால் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்!

ஜெஸ்மி எம்.மூஸா மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த சேவையில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீனால் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மருதமுனை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மருதமுனை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.ஜே.எல். அஸீல் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

ACJU சாளம்பைக்குளம் கிளை – முத்து முஹம்மட் எம்.பி சந்திப்பு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாளம்பைக்குளம் பிரதேசக் கிளைக்கும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில், பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் S.M.அப்துல் மஜீத் (காஸிமி), பொருளாளர் அஷ்ஷெய்க் K.றபியுதீன் (பக்ரி) மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள், பிரதேசக் கிளையின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற…

Read More