Headlines

பேராதனை – கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்

பேராதனை மற்றும் கண்டி நகருக்கு இடையில் ரயில் பஸ் சேவையை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

Read More

உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்அஜ்மீர், பிரதேச சபை உறுப்பினர் நெளபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், முன்னாள் தவிசாளர் ஹமீட், உதவி கல்விப் பணிப்பாளர் , ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள்,…

Read More

அமெரிக்காவிற்கு அடுத்த தலைவலி – ரஷ்யா பக்கம் சாயும் ஈராக்

சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ் போராளிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். போராளிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள், விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துவரும் ஈராக்கின் பிரதம மந்திரி…

Read More

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம் பதற்றத்தை தணிக் கும் முயற்சியாக அல் அக்ஸா பள் ளிவாசல் வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தும் நடவடிக் கைக்கு இஸ்ரேல் பொலிஸ் தடங் கல் ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீனர்க ளின் போராட்டம் எந்த தொய்வும் இன்றி தொடர்ந்த வண்ணம் உள் ளது. இதில் ஹெப்ரூன் நகரில் இஸ் ரேலியர்கள் மீதான கத்திக் குத்து…

Read More

ACMC புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருகிறது

இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார். வவுனியா மதவாச்சி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு…

Read More

இஷாக் எம்.பியின் முயற்சியில் குடிநீர் கிணறுகள்!

குடிநீர் பிரச்சினைக்கு மிக நீண்ட காலமாக முகம் கொடுத்து வரும் அனுராதபுரம் மாவட்டம் கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து பழைய கிணறுகள் புனரமைப்பு மற்றும் புதிய கிணறுகள் நிர்மாணித்து கொடுப்பதற்கான வேலைகள் நேற்று முன்தினம் (09) இஷாக் ரஹுமான் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் மூலம்  புனர்நிர்மாணம் மற்றும் புதிதாய்…

Read More

அனுராதபுர அலுத்கமயில் தையல் பயிற்சி நிலையம் அங்குரார்ப்பணம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலின் பேரில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய நுவரகம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அலுத்கம கிராமத்தில் யுவதிகளுக்கான புதிய தையல் பயிற்சி நிலையம் கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புடவைக்  கைத்தொழில் நிருவனத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தையல் பயிற்சி நிலையத்தை, இஷாக் ரஹ்மான் எம்.பி உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைத்தார். (ஸ)

Read More

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறவில்லை – பஸில் ராஜபக்ஸ

வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி  அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கியதாகவும், இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. அதன்பின்னர் அவர்கள் புலிகளினால் பலாத்காரமாக விரட்டியடிக்கபட்டனர். பயங்கரவாத பிரச்சினை…

Read More

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள்

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கிரமமின்றி குப்பைகள் அகற்றப்படுவது தொடாபில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திர சாதனங்களின் உதவி நாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் குப்பை அகற்றுவதற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்வது சிரமமானது என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More

கண்மூடித்தனமான செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஊடக தர்மம் பாதிக்கப்படுகிறது

அண்மைய காலங்களில் சில ஊடகங்கள் கண்மூடித்தனமாக தவறான செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் ஊடக தர்மம் மீறப்படுகிறது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உண்மையான செய்தி மூலங்களை தவிர்த்து, அவற்றினை ஒழுங்காக ஆராயாது ஊடகத்துறையின் ஒழுக்க கோவைகளை மீறி சில கண்மூடித்தனமான செய்தி வெளியீடுகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவதில் அண்மைக்காலமாக சில ஊடகங்களினால் சில…

Read More

அமைச்சர் றிஷாத், பிரதமரை சந்திக்க முடிவு,,,,,

-சுஐப் எம்.காசிம் – சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிகளைப் பற்றி பிழையான எண்ணங்களையும், கருத்துக்களையும் ஏற்படுத்துவதற்காக இனவாத சக்திகளின் ஒத்துழைப்புடன் சில முகநூல்களும், போலி இணையத்தளங்களும் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன என்றும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போலியான இணையத்தளங்கள் மற்றும் முகநூல்களைக் கட்டுப்படுத்தும் வழி வகைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல இரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இத்தகைய போலியான, பொய்யான, வேண்டுமென்றே திரிவுபடுத்தப்பட்ட…

Read More