News
கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் புதிய ஜனாதிபதி
அஸ்ரப் ஏ சமத் கண்டி தலாதா மாளிகையில் புதிய ஜனாதிபதி அஸ்கிரிய மகா பீடாதிகளிடம் ஆசிர்வதிப்பதிலும் மற்றும் கண்டி மீரா மக்கா பள்ளிவாசலிலும் துஆ பிரத்தனையிலும் ஈடுபட்டனர்.
இன முரண்பாடுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படாது – மங்கள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றியை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றியை தடுக்க முயற்சி மேற்கொண்டதாகவும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முயற்சித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டுவதனை…
பாலிவுட்டைத் துறந்து, இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்…!
23 வயதான முர்ஸிலின் பிர்ஸாதா இஸ்லாமிய குடும்பத்தில்தான் பிறந்தார். ஆனால் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இவரிடத்தில் இருந்ததில்லை. தந்தை ஃபெரோஸ் பிர்ஸாதா காஷ்மீரில் பெரும் தொழிலதிபர். இவ்வளவு வசதிகள் இருந்தும் சினிமா மோகத்தால் மும்பையில் செட்டில் ஆகி ‘ஏக் தா டைகர்’ என்ற சல்மான்கான் படத்துக்கு துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். யாஷ் சோப்ரா இவரது சினிமா ஆர்வத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தார். ஆடம்பர வாழ்வு, ஃபேஷன் ஷோக்கள் என்று மிக சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. திடீரென…
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான
ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக கருணாரத்ன பரணவிதான தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பும், மக்கள் சேவையும்
ஷப்ரான் முஹம்மட் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் கடந்த 22.12.2014ம் திகதி தொடக்கம் 18 நாட்களாக சிறுவர்கள் உட்டபட முதியோர் வரை 23 பேர் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தேர்ச்சியாக வாழைச்சேனை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக வாழைச்சேனை பொது வைத்திய அதிகாரி அலுவலகமும், மட்டக்களப்பு சுகாதார டெங்கு தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையிலும், டெங்கு தடுப்பு தொடர்பான அனைத்து செயற்பாடுகளின்…
பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி
அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகளும் உள்ளடங்குகிறார்கள். இதனால் இவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையில்…
நாட்டுக்கு தேவை அரசனல்ல; நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே: மைத்திரிபால சிறிசேன
நாட்டுக்கு தேவை அரசனல்ல, நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், ஆசிகளையும் பெற்று கொண்டார். இதன் பின்னர் கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளதாவது, “ஒரு நாட்டுக்கு தேவை அரசனல்ல. உண்மையாக ஆட்சிபுரியும் நல்ல…
பிரான்ஸில் வரலாறு காணாத மாபெரும் ஒற்றுமைப் பேரணி!:முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்பு
ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பல நகரங்களில் தீவிரவாதத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் கவனயீர்ப்புப் ஒற்றுமைப் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில நாட்களில் தீவிரவாதிகளால் பாரிஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப் பட்ட கொலைத் தாக்குதல் மற்றும் ஏனைய தாக்குதல்களால் மொத்தம் கொல்லப் பட்ட 17 மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பேரணி நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு மில்லியன் மக்கள் பங்கு பற்றிய பாரிஸ் பேரணியில் அணிவகுத்துச் சென்ற மக்களுக்கு முன்பாக…
இலங்கை முஸ்லிம் சமூக நலன்புரிமை அமைப்பினால் றிஷாத்பதியுதீன் பாராட்டி கௌரவிப்பு
A.S.M.இர்ஷாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாத் பதியுதீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை(12) வெள்ளவத்தையில் நடைபெற்றது. இலங்கை முஸ்லிம் சமூக நலன்புரிமை அமைப்பு கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாஸ ராஜபக்ஷ, ஆர்.யோகராஜன், அமீர் அலி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் புரவலர் ஹாசிம் உமர், மாகாண சபை உறுப்பினர்…
முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா இந்தியா சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்கள் மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளங்கள் முடக்கப்பட்ட மாட்டாது என ஜனாதிபதியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட மாட்டார்கள் எனவும்…
