News
விமலின் மனைவியை கைது செய்ய உத்தரவு!
முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் அமரதுங்க நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மஹிந்த ஆட்சியின் ஜனாதிபதி செயலக போக்குவரத்து தலைவர் கைது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில், இலங்கை ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு (படங்கள் இணைப்பு)
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சற்று நேரத்திற்கு முன்பு, ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் மைத்திரி சந்திக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை விமர்சித்தவருக்கு ஜோர்தானில் சிறை
ஜோர்தானில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் ஒருவருக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸை விமர்சித்திருந்த குற்றச்சாட்டில் 18 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜோர்தானில் முக்கிய எதிரணி புள்ளி ஒருவருக்கு எதிராக, கடந்த பல ஆண்டுகளில் இப்படியான வழக்கொன்று இப்போது தான் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றுடனான உறவை பாதிக்கும் விதத்தில் ஸாக்கி பானி இர்ஷாய்ட் கருத்து வெளியிட்டுள்ளதாக இராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. ஜோர்தானின் முக்கிய நிதி ஆதார நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளங்குகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று முதல் இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சேவை இடம்பெறவுள்ளது. வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்களின் சிரமத்தை குறைத்துக்கொள்ளும் விதத்தில் இன்று முதல் தொடர்ந்து இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை வழங்கவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது! காலியில் பிரதமர்
காலி பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த பிரதமர் காலி மாவட்ட ஐ. தே. க. ஆதரவாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காலி ஐ. தே. க. பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது. தென்பகுதி சுற்றுலா வளர்ச்சி குறித்தும் புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் பிரதமர் இங்கு கருத்துத் தெரிவித்ததார். அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் 3 பிரதான திட்டங்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துதல்,…
இலங்கை ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியார் ஜெயந்தியுடன் இந்தியா சென்றுள்ளார். டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிகளை, மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய…
பயணிகள் விமாணத்தில் ஜனாதிபதி மைத்திரியின், முதலாவது வெளிநாட்டு பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர். ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி நாளை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படவுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வெட்கத்திற்கு, உள்ளாகும் நிலையேற்படும் – சுஜீவ சேனசிங்க
மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து போகும் என பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் தோல்வியை பொறுத்து கொள்ள முடியாது மகிந்தவின் வருகை குறித்து பேசி வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை .இழக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலரே அந்த கட்சியை அழிக்க போகின்றனர். மகிந்தவின் வருகை (இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மகிந்த தேரரின் வருகை) என்பது இலங்கையின்…
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றி ஆராய குழு வேண்டும்!
கடந்த நான்கு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைப் போல் அளுத்கமை…
பசிலை விசாரிக்க சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்: அரசாங்கம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தற்போது தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். எனவே அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள…
இலங்கையில் மனித உரிமைகள் நிலை முன்னேறி விட்டது அமெரிக்கா
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
