News
மஹிந்தவின் கனவுகள் சுக்குநூறாகியும் இனவாத சக்திகள் இன்னும் பாடம்கற்கவில்லை – YLS ஹமீட்டின் ஊடக அறிக்கை
அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்டின் ஊடக அறிக்கை மஹிந்த ராஜபக்ச பட்டும் தேறாதவர் என்ற பட்டியலில் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரச கட்டிலில் ஏற்றுவதற்காக சில கட்சிகளும், அமைப்புக்களும் பகிரதப் பிரயத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஓர் ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அதற்கான உரிமை உண்டு. ஆனாலும் தமது இலக்கை அடைவதற்காக இன்னுமொரு சமுகத்தை சீண்டி அல்லது மலினப்படுத்தி அதனை…
உலகில் உள்ள கணனிகளில் ”அமெரிக்காவின் உளவு மென்பொருள்” இருப்பது அம்பலமானது
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் (என்.எஸ்.ஏ.), வெஸ்டன் டிஜிடல், சீகேட், டொ’பா மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கணனிகளின் ஹாட் டிரைவ்களில் உளவு மென்பொருளை மறைத்து வைத்திருக்கும் விடயம் அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு உலகில் இருக்கும் மிகப் பெரும்பான்மையான கணனிகள் ஊடே உளவு வேலையில் ஈடுபட முடியும் என்று ரஷ்யாவை மையமாகக் கொண்டு இயங்கும் கணனி பாது காப்பு மென்பொருள் தயாரிப்பு நிறு வனமான காஸ்பர்ஸ்கி கண்டறிந்துள்ளது. உலகில் உள்ள 30 நாடுகளின் தனி…
மைத்திரியின் இந்திய விஜயம் தொடர்பில் சீனா கருத்து
இந்தியா, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் மத்தியில் நட்புரிமையும் நல்லுறவும் நிலவுகிறது. இந்தியாவும் இலங்கையும் சீனாவை பொறுத்தவரை முக்கியமான நாடுகளாகும். இந்தநிலையில் இந்தியாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் அதேநேரம், இலங்கையுடனும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக சீன பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையும் இந்தியாவும் அணு உடன்படிக்கை உட்பட்ட பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டநிலையிலேயே சீனாவின் கருத்து வெளியாகியுள்ளது.
தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு கோத்தபாயவே அனுமதி வழங்கினார்!
குற்றப்புலனாய்வுத் துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் போது அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தி;ல் கைப்பற்றப்பட்ட ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சியமும், காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட எவான்ட்காட் ஆயுதக் களஞ்சியமுமே இவையாகும். இந்த விடயம் தொடர்பில் மூன்று பேரைக் கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள், கோத்தபாயவை விசாரணை செய்தனர்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சலுகைகள் கிடையாது; மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்: அஜித் ரோஹண
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். விசாரணையின் போது கோத்தபாய ராஜபக்ஷவுக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை…
இலங்கை -இந்தியா அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு
சர்வதேச அணு சக்தி முகாமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்தம் குறித்து தாம் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
கோத்தபாயவுக்கு விஷேட சலுகை ஏன்? – அமைச்சர் ரவி கேள்வி
எந்த காரணத்திற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் வீட்டுக்கு போகின்றனர் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்பினரின் ஆயுதங்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொலிஸார் விசாரணை நடத்தும் போது கோத்தபாய ராஜபக் ஷவுக்கு…
பகிடிவதையால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சப்ரகமுவ மாணவி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹோமாகமையைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி…
பாலித்த தெவரப்பெரும பிணையில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும இன்று கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச் சீட்டை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர பாராளுமன்ற உறுப்பினருக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அகலவத்தை நகரில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றின்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…
சமுர்த்தி கொடுப்பனவு 7000 மில்லியன் ருபா பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர் -சஜித் பிரேமதாச
அஸ்ரப் ஏ சமத் -சமுர்த்தி அதிகார சபை சேவையாற்றி ஓய்வூதியம் பெற உள்ளவர்கள் 8368 ஊழியர்களுக்கும் கொடுப்பணவுகள் முழுவதும் வழங்கப்பட உள்ளன- சமுர்த்தி அதிகார சபையில் சேவை செய்த ஊழியர்கள் 8368 பேர் முந்திய அரசாங்கத்தின் காலத்தில் சுயமாக விலகி ஓய்வூதியக் கொடுப்பனவுகள் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக அவர்களுக்கு எவ்வித கொடுப்பணவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு மனித உரிமை நீதிமன்றம், ஊழியர் நீதிமன்றம்…
ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு
ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன். இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நியாயமானது என கருதுகின்றேன் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள்…
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் சிவில் அணு உடன்படிக்கை உள்ளிட்ட நான்கு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சிவில் அணு தொடர்பான முதலாவது உடன்படிக்கை இன்று மதியம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு 04 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் நரேந்திர…
