Headlines

லலித் கொத்தலாவலயின் வழக்கு ஜுன்மாதம் 05ம் திகதிவரை ஓத்திவைப்பு

அஸ்ரப் ஏ சமத் சிலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு லலித் கொத்தலாவல அவர்களுக்கு எதிரானவழக்கில் பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். மேற்படி வழக்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி முகம்மட் பஸீல் அவர்கள் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வுத்தரவு வழங்கப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வடிக்கையாளர்கள் குறித்த சிலிங்கோபுரப்பட்டி செயாரிங் நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்ட பணம் மோசடியாக கையாளடப்பட்டதாகவும் குறித்த வாடிக்கையாளர்களின் முதலீட்டுப் பணத்தையோஅவர்களுக்கான இலாபத்தையோ இந்நிறுவனம் இதுவரை செலுத்தாமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர்…

Read More

முகம்மட் பஹாத் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அமைச்சான கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்துகுந்தகம் விளைவித்தமை தொடர்பில் சர்ச்சைக்குரிய இனவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறுபேருக்குகோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) பிடியாணை பிறப்பித்தது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமைதொடர்பில் பொதுபல சேனாஅமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் கடந்த ஜனவரி 22ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தொடங்குகிறது தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி

வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948-ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன. 1950-53 ஆண்டுகளில் இரு நாடுகள் இடையே போர் நடந்தது. அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளும் பரம எதிரிகளாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில், தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை…

Read More

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் அவரது மகன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தராக அவரது மகனான யோசித்த ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கடற் படை லெப்டினான யோசித்த ராஜபக்ஷ, தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைக்குமாறு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது கடற் படையில் மூன்று மாத விடுமுறை பெற்று வெளிநாடு சென்றுள்ள அவர், கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

Read More

மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்களிடம் அனுதாபம் தேட விமல் வீரவங்ச முயற்சி: மனோ கணேசன்

தனது மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடுவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும் கிளப்ப விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில்…

Read More

இலங்கை வெளிவிவார அமைச்சர் சீனாவிற்கு விஜயம்

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு மங்கள சமரவீர சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயர் அதிகாரியொருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர, சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…

Read More

வரிக்குறைப்பு அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!– நிதி அமைச்சர்

புதிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சில வகை வாகனங்களுக்கான வரியை குறைத்திருந்தது. வாகன என்ஜினின் வலு 1000ற்கும் குறைந்த வாகனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு பாரியளவில் நன்மைகள் கிடைக்கும். எனினும் ஒரு சில நிறுவனங்கள் இந்த சலுகையை வழங்குவதில்லை, சிறு தொகையை மட்டும் குறைத்து வழங்குகின்றன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உரிய முறையில் மக்களுக்கு வாகன வரிக் குறைப்பு நலனை வழங்காத…

Read More

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித்

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவாக வளர்ந்து வரும் இஸ்லாமும் ஒன்றாகும். அமெரிக்காவில் உள்ள 1,200 பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை கடந்த 12 ஆண்டுகளில் கட்டப்பட்டவையாகும். இதில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்கள் மேன்மை ‘முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை யாராலும் தடுக்க முடியாது’

-அஸ்ரப் ஏ. சமத்- நாட்டில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் அல்லது பர்தா ஆடையை யாராலும் தடுக்க முடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்தார். குறித்த ஆடையினை தடுப்பதற்கு எந்தவொரு அரசாங்க பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு எந்தவித உரிமை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆடை முஸ்லிம் பெண்களது இஸ்லாமிய, கலை கலாசார ஆடையாகும். அதனை அவர்கள் அணிவதற்கு உரிமை உண்டு. எனினும் அதனை அணிய வேண்டாம்…

Read More

மின் கட்­டணம் குறைக்கப்படும் – பாலித ரங்கே பண்­டார

நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்­டணம் மற்றும் இயந்­தி­ரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்­ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்கும் மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மின் இணைப்பு பெற்­றுக்­கொள்ளும் முறையும் இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். கொழும்பு தெமட்­ட­கொடை இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றிப் பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அதற்­கி­ணங்க நாட்டின்…

Read More

மீண்டும் இனவாதிகளின் கைகளில், ஆட்சியினை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கமாட்டோம்

தேசிய பிரச்­சி­னை­களை தாண்டி ஒன்­று­பட்ட இலங்­கை­யினை கட்­டி­யெ­ழுப்பும் ஒரே நோக்­கத்­திற்­கா­கவே தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்து ஆட்சி நடத்­து­கின்றோம். சிங்­கள பௌத்த உரி­மை­களைப் போல் தமி­ழரின் உரி­மை­க­ளுக்கும் உணர்­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கிடைத்­தி­ருக்கும் வாய்ப்­பினை மீண்டும் சர்­வா­தி­கா­ரி­களின் கைகளில் கொடுத்து நல்­லாட்­சியின் பாதை­யினை மாற்­றி­ய­மைக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்­திற்கு கொண்டு…

Read More

மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு எந்தக்கட்சியாக இருந்தாலும் அவை மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் அதன் பின்னால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஏனைய கட்சிகளுடன் வ ஒப்பீட்டு பார்க்கும் போது எமது கட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் பலத்தினால் ஆற்றியுள்ள பணிகளை நீங்கள் எடை போட்டு பார்க்கலாம் என மக்களிடத்தில் எடுத்துரைத்தார். வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட வாழவைத்த குளம் பஸ் தரிப்பு நிலையம்,மற்றும் பொது விளையாட்டு…

Read More